கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன?

கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன?
மாநகராட்சியின் பல்வேறு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பிறகும் இராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. ராயபுரத்தில் நேற்று ஒரே நாளில் 69 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 1768 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிக பாதிக்கப்பட்ட மண்டலமாக ராயபுரம் மாறி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 


தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 569 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் போன்ற மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இதையடுத்து சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுபாட்டு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 130 இடங்களும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 121 இடங்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 80 மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் 77 இடங்களும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மே 22ம் தேதி உறுதி செய்யப்பட்ட 786 தொற்றுகளில், சென்னையில் 569 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 9,364 பேரில், 3,791 பேர் குணமடைந்துள்ளனர். 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 60.28 சதவீதம் ஆண்கள், 39.70 சதவீதம் பெண்களும், திருநங்கை 5 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, கோயம்பேடு மார்கெட்டை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான பேருக்கு தொற்று பரவியுள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:


குணமடைந்தவர்கள்

வயது வாரியாக பார்க்கையில்

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url