கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன? சென்னைக்கு பெரும் தலைவலியாக உருவெடுக்கும் புளியந்தோப்பு

கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன?
மாநகராட்சியின் பல்வேறு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பிறகும் இராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. ராயபுரத்தில் நேற்று ஒரே நாளில் 201 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 1473 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிக பாதிக்கப்பட்ட மண்டலமாக ராயபுரம் மாறி உள்ளது.

தமிழகத்தில் மே 19ம் தேதி உறுதி செய்யப்பட்ட 688 தொற்றுகளில், சென்னையில் 552 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 7,672 பேரில், 1,931 பேர் குணமடைந்துள்ளனர். 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 60.40 சதவீதம் ஆண்கள், 39.58 சதவீதம் பெண்களும், திருநங்கை மூவரும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, கோயம்பேடு மார்கெட்டை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான பேருக்கு தொற்று பரவியுள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:


குணமடைந்தவர்கள்

வயது வாரியாக பார்க்கையில்

சென்னைக்கு பெரும் தலைவலியாக உருவெடுக்கும் புளியந்தோப்பு
சென்னை புளியந்தோப்பு கொரோனா தொற்றால் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு லட்சம் பேரில் 241 பேர் வரை தொற்று பரவல் கண்டறிப்பட்டுள்ளது. அதிக பரவல் உள்ள பகுதியில் “நம்ம சென்னை - கோவிட் விரட்டும் திட்டம்,” இன்று முதல் (20.05.2020) அமல்படுத்தப்படுகிறது.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7672 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, தண்டையர் பேட்டை, வளசரவாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 31 வார்டுகளில் கடந்த 3 நாட்களாக புதிய தொற்றுகள் எதுவும் கண்டறியபப்டவில்லை. இதைத்தவிர்த்து 136 வார்டுகளில் 10க்கும் குறைவான தொற்றுகளே கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சென்னையை பொறுவதவரை 167 வார்டுகளில் மிக குறைந்த அளவிலேயே தொற்று பரவல் இருந்து வருகிறது.

எஞ்சிய 33 வார்டுகளில் மட்டுமே நோற்று தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதிகளை கண்டறிந்து, நோய் தொற்று அதிகம் உள்ள வார்டுகளில் கண்காணிப்பை மிகவும் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, திரு.வி.க., மண்டலத்துக்கு உட்பட்ட 77 வார்டு, புளியந்தோப்பில் 9800 குடியிருப்புகளில், 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதியாக உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக இந்த வார்டில் மட்டும் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 124 முதல் 242 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை, பனமரத்தொட்டி, முத்தையால் பேட்டை, சீதக்காதி நகர், கோயம்பேடு, மதுரவாயல் பகுதிகளில் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 41 முதல் 124 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

செம்பியம், பெரியமேடு, கிருஷ்ணம்மாபேட்டை, அம்பத்தூர், நெற்குன்றம் பகுதிகளில் சராசரியாக ஒரு லட்சம் பேரில் 14 முதல் 41 பேருக்கு தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.

எனவே, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இந்த பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் ”மைக்ரோ ப்ளான்” செயல்படுத்தப்பட உள்ளது. ராயபுரம் பகுதியில் இன்று முதல் ”நம்ம சென்னை - கோவிட் விரட்டும் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.


சென்னையில் 70 முதல் 75 சதவீத வைரஸ் தொற்று ஏற்கனவே வைரஸ் பாதித்த பகுதிகளில் உள்ள இல்லங்களில் இருந்து தான் ஏற்படுகிறது. இந்த பகுதியில் வீடு வீடாக சென்று செயன்று மொபைல் எக்ஸ்ரே, தெர்மல் ஸ்கிரினிங் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரே இடத்தில் 200 பேர் இருந்து கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்:
கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். இந்தப் பகுதிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளும் எதுவும் பொருந்தாது. வெளி நபர்கள் யாரும் இந்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நாளுக்கு நாள் சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் புதிய தொற்று வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த எண்ணிக்கை 683 ஆக இருக்கிறது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக, திரு.வி.க.நகர் - 117 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. முன்னதாக இந்த மண்டலத்தில் 124 ஆக இருந்தது. ராயபுரம் - 102, தேனாம்பேட்டை- 72, அம்பத்தூர் -59, வளசரவாக்கம் - 42, தண்டையார்பேட்டை- 39, மணலி -38, திருவொற்றியூர் - 31, அண்ணாநகர் -30, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களின் ஒன்றான கோடம்பாக்கத்தில் 22யில் இருந்து 60 ஆக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல், மாதவரத்தில், 24ல் இருந்து 41 ஆக அதிகரித்துள்ளது. அடையாறு- 20, சோழிங்கநல்லூர் - 14, பெருங்குடி- 10, ஆலந்தூர் - 8 பகுதிகள் என மொத்தம் 687 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

கடந்த 10ம் தேதி சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 587 ஆக இருந்தது. பின்னர் 12ம் தேதி பட்டியலில் அது 690 ஆக அதிகரித்தது.மேலும், கடந்த சில நாட்களாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு தெருக்களையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அடைப்பை தவிர்த்து வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது அவரது வீட்டின் அருகாமையில் உள்ள இரண்டு மூன்று வீடுகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad