ஊரடங்கு தளர்வு: ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி; கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சோதனை கட்டாயம் : ஐ.சி.எம்.ஆர்
ஊரடங்கு தளர்வு: ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் ஊரடங்கால் வேலையின்றி இருக்கும் தங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டுமென முடி திருத்தும் தொழிலாளர்கள் (சலூன் கடைக்காரர்கள்) கோரிக்கை விடுத்து வந்தனர். பல இடங்களில் இதற்காக போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 16ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நேற்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 25 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வின் ஒரு பகுதியாக ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதியில்லை.
சலூன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தினந்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தும்பொழுது, கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். அடிக்கடி சோப்பு கொண்டு கைகளை கழுவுவது அவசியம் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
* முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்.
* முடி திருத்தும் நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும், முகக்கவசம் அணிவது கட்டாயம்.
* அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியம்.
* சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை.
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சோதனை கட்டாயம் : ஐ.சி.எம்.ஆர்
இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டதால் பரிசோதனையை விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது குறித்த நெறிமுறைகளை இந்திய ஆராய்ச்சி மருத்துவ கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
*கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும்
*தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
*கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை.
*புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
*கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு சோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
*கடந்த 14 நாட்களில் கொரோனா அறிகுறி உள்ள வெளிநாட்டினருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
*கடுமையான மூச்சுத்திணறல் நோய்த்தொற்று நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.