கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன? சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன?
மாநகராட்சியின் பல்வேறு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பிறகும் இராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. ராயபுரத்தில் நேற்று ஒரே நாளில் 73 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 1185 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிக பாதிக்கப்பட்ட மண்டலமாக ராயபுரம் மாறி உள்ளது.
தமிழகத்தில் மே 17ம் தேதி உறுதி செய்யப்பட்ட 639 தொற்றுகளில், சென்னையில் 482 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 6,750 பேரில், 1498 பேர் குணமடைந்துள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 60.87 சதவீதம் ஆண்கள், 39.10 சதவீதம் பெண்களும், திருநங்கை இருவரும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, கோயம்பேடு மார்கெட்டை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான பேருக்கு தொற்று பரவியுள்ளது.
மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
குணமடைந்தவர்கள்
வயது வாரியாக பார்க்கையில்
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்:
நாளுக்கு நாள் சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் புதிய தொற்று வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த எண்ணிக்கை 683 ஆக இருக்கிறது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக, திரு.வி.க.நகர் - 117 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. முன்னதாக இந்த மண்டலத்தில் 124 ஆக இருந்தது. ராயபுரம் - 102, தேனாம்பேட்டை- 72, அம்பத்தூர் -59, வளசரவாக்கம் - 42, தண்டையார்பேட்டை- 39, மணலி -38, திருவொற்றியூர் - 31, அண்ணாநகர் -30, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களின் ஒன்றான கோடம்பாக்கத்தில் 22யில் இருந்து 60 ஆக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல், மாதவரத்தில், 24ல் இருந்து 41 ஆக அதிகரித்துள்ளது. அடையாறு- 20, சோழிங்கநல்லூர் - 14, பெருங்குடி- 10, ஆலந்தூர் - 8 பகுதிகள் என மொத்தம் 687 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
கடந்த 10ம் தேதி சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 587 ஆக இருந்தது. பின்னர் 12ம் தேதி பட்டியலில் அது 690 ஆக அதிகரித்தது.மேலும், கடந்த சில நாட்களாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு தெருக்களையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அடைப்பை தவிர்த்து வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது அவரது வீட்டின் அருகாமையில் உள்ள இரண்டு மூன்று வீடுகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.