கள்ளத்தொடர்பு விவகாரத்தால் சம்பவம்: மனைவியை கொன்று, தனியார் நிறுவன அதிகாரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே கூட்லுகேட் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ்குமார்(வயது 38). பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சந்தியா(32). இவரும் பீகாரைச் சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் மணீஷ்குமாருக்கு, வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சந்தியாவை, அவருடைய உறவினர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் சந்தியாவின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் மணீஷ்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் தனது போனை எடுக்கவில்லை.
தற்கொலை
இதனால் பதற்றம் அடைந்த சந்தியாவின் உறவினர்கள், நேற்று மதியம் கூட்லுகேட் பகுதியில் உள்ள சந்தியாவின் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் வந்ததைப் பார்த்த மணீஷ்குமார் திடீரென வீட்டின் 3-வது மாடிக்கு ஓடிச்சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவருடைய வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது படுக்கை அறையில் சந்தியா பிணமாக கிடந்தார். இதனால் பதறிப்போன அவர்கள் உடனடியாக இதுபற்றி பரப்பனஅக்ரஹாரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மணீஷ்குமார் மற்றும் சந்தியாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கழுத்தை நெரித்து கொலை
போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணீஷ்குமாருக்கும், சந்தியாவுக்கும் கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மணீஷ்குமார், சந்தியாவின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க அவர் 2 நாட்களாக சந்தியாவின் உடலை வீட்டிலேயே வைத்துவிட்டு திட்டம் தீட்டியுள்ளார்.
ஆனால் நேற்று மதியம் சந்தியாவின் உறவினர்களைப் பார்த்த அவர் பயந்துபோய் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணப்பெண், தோழியுடன் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கோக்கலை எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஜோதி (வயது 23). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஜோதியின் பெற்றோர் கடந்த 6 மாதங்களாக கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜோதி கணவரை பிரிந்து பெரியமணலியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள தறிப்பட்டறைக்கு அவர் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த தறிப்பட்டறையில் கோட்டப்பாளையத்தை சேர்ந்த பிரியா (20) என்பவரும் வேலை செய்து வந்தார். இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. ஜோதிக்கும், பிரியாவுக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணை பிரியாத தோழிகளாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வரும் அளவுக்கு நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்கிடையில் திருமணம் நடந்தால் நெருங்கிய தோழியான ஜோதியை பிரிய நேரிடுமே என்று மணப்பெண் பிரியா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை பிரியா, தாயிடம் கூறிவிட்டு சைக்கிளில் ஜோதி வீட்டுக்கு வந்தார். அங்கு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் இருவரும் ஒரே சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.