ஊரடங்கு முடியும் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டாம்: சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
ஊரடங்கு முடியும் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
ஊரடங்கு முடியும் வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின் இணைப்பை துண்டிக்க கூடாது என தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சென்னை ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. மின் இணைப்பை துண்டிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்கள் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி மே 6 ஆம் தேதி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மின்கட்டணக் கவுண்டர்களுக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், ஏற்கெனவே பயனீட்டாளா்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

அதேபோல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் உற்பத்தி மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன. சொத்து வரி, குடிநீர் கட்டணம், விவசாய கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால அவகாசம் வருகிற ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணங்களை வருகிற 6-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தற்போது நிலவும் சூழ்நிலையினால், இந்த கால அவகாசத்தை வருகிற ஜூலை 31-ந்தேதி வரை நீட்டிக்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்  வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மே 18ஆம் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அத்துடன் மின் கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மேலும் இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் மே 18க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad