சொந்த ஊருக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த வெளிமாநிலத்தவர்கள் தண்டவாளத்தில் தூங்கியபோது ரயில் மோதி பலி; தந்தை நினைவாக வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
Aurangabad Rail Accident | பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 16 வெளிமாநிலத்தவர்கள் தண்டவாளத்தில் தூங்கி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் சிறப்பு ரயிலை பிடிக்க 45 கி.மீ நடந்து வந்தவர்கள் ஒய்வெடுக்க தண்டவாளத்தில் தூங்கிய போது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 வெளிமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஊரடங்கில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அழைத்து செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிராவில் பணிபுரியும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயிலை பிடிக்க 45 கி.மீ ரயில் தண்டவாளத்தில் நடந்து வந்துள்ளனர்.
அவுரங்காபாத் ரயில் நிலையம் அருகே ஒய்வெடுக்க தண்டாவளத்தில் படுத்து உறங்கி உள்ளனர். அதிகாலை 5.15 மணிக்கு அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியுள்ளது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் பலியானவர்கள் மஹாராஷ்டிராவின் ஜல்னாவில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரயிலை பிடிக்க 170 கி.மீ இவர்கள் நடைபயணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். 45 கி.மீ நடந்து வந்த இவர்கள் அவுரங்காபாத் அருகே ஒய்வெடுக்க தண்டவாளத்தில் தூங்கியதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்திருப்பது தெரிந்து ரயிலை நிறுத்த முயற்சி கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்பராதவிதமாக ரயில் அவர்கள் மீது மோதிவிட்டதாக ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
தந்தை நினைவாக வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தந்தை நினைவாக வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புரசைவாக்கம் தாண்டவராயன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் தியாகராஜன் (வயது 21). இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு அதேப்பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு அவரது தந்தை ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள உயர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் சிலமாதங்களுக்கு முன்பு அவரது தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தியாகராஜன் தனது தந்தையின் நினைவாக, அவர் வாங்கிக்கொடுத்த மோட்டார் சைக்கிளை பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வேப்பரி போலீஸ் நிலையத்தில் தியாகராஜன் புகார் அளித்து இருந்தார். வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென் றவர்களை தேடி வந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக வழக்கில் தொய்வு ஏற்பட்ட நிலையில் குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிள் திருடு போனதால் தியாகராஜன் கடந்த ஒருமாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தியாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேப்பேரி போலீசார் அவரது உடலை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் நினைவாக இருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனதால் சில நாட்களுக்கு முன்னதாக மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை முயன்ற அவரை காப்பாற்றியதாகவும், பின்னர் போலீசார் ஊரடங்கு முடிவடைந்ததும் நிச்சயமாக மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தருவதாக கூறியிருந்தாகவும் கூறப்படுகிறது.
ஊரடங்கால் வருமானம் இல்லாததால் கணவருடன் தகராறு: கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
புழல் அருகே காதல் திருமணம் செய்த நிறைமாத கர்ப்பிணி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மன் கோவில் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் செல்வராஜ்(வயது 25). இவர், அதே பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா(20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது சரண்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஜெகன் செல்வராஜ், போதிய வருமானம் இன்றி தவித் ததாக தெரிகிறது.
இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஜெகன் செல்வராஜ் வீட்டின் வெளியே வந்து, காலையில் வியாபாரத்துக்கு செல்வதற்காக தள்ளுவண்டியில் காய்கறிகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
பின்னர் வீட்டுக்குள் சென்றபோது, தனது காதல் மனைவி சரண்யா, புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தூக்கில் தொங்கிய சரண்யாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சரண்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். சரண்யாவுக்கு திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் இதுபற்றி சென்னை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.