Matrimony OTT-Platforms Jobs Coupons Business

கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன? திரு.வி.க. நகர், ராயபுரத்தை தொடர்ந்து 'ஹாட் ஸ்பாட்' ஆன கோடம்பாக்கம்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கொரோனா பரவல் - சென்னையின் நிலை என்ன?
சென்னையில், 63.94 சதவீதம் ஆண்கள், 35.99சதவீதம் பெண்களும், திருநங்கை ஒருவரும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் இன்று அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 58 பேரும், திரு.வி.க.நகரில் 34 பேரும், ராயபுரத்தில் 23 பேரும், அண்ணாநகரில் 22 பேரும், தேனாம்பேட்டையில் 21 பேரும், வளசரவாக்கத்தில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தண்டையார்பேட்டையில் 8 பேரும், அம்பத்தூரில் தலா 9 பேரும், அடையாறு மற்றும் திருவொற்றியூரில் தலா 2 பேரும், மாதவரதம் மற்றும் சோழிங்கநல்லூரில் தலா ஒருவரும், மணலி, ஆலந்தூர், பெருங்குடியில் நேற்று புதிதாக தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை.

தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 266  கொரோனா தொற்றுகளில், சென்னையில் 203 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் பாதித்துள்ள 1458 பேரில், 226 பேர் குணமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
திரு.வி.க.நகர் மண்டலம் -324

ராயபுரம் மண்டலம்  -275

தேனாம்பேட்டை -166

கோடம்பாக்கம் -199

தண்டையார்பேட்டை -118

அண்ணா நகர் -130

வளசரவாக்கம் -92

அம்பத்தூர் - 58

அடையாறு -29

திருவொற்றியூர் - 22

ஆலந்தூர் -10

பெருங்குடி -10

மாதவரம் -9

மணலி- 5

சோழிங்கநல்லூர் - 6

ஆரம்பம் முதலே வட சென்னையில் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. திரு.வி.க.நகர், ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 41.08 சதவீதமாகும்.
குணமடைந்தவர்கள்
அதேபோல், நேற்று சென்னையில் புதிதாக யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. சென்னையில் குணமடைந்தோர் சதவீதம் 15.50 ஆக உள்ளது.

வயது வாரியாக பார்க்கையில்
30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 319 பேருக்கும், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 338 பேருக்கும், தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேல் 13 பேரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 149 பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 271 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 189 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 98 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 35 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

திரு.வி.க. நகர், ராயபுரத்தை தொடர்ந்து 'ஹாட் ஸ்பாட்' ஆன கோடம்பாக்கம் 
சென்னையில் திரு.வி.க. நகர், ராயபுரம் மண்டலத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

கோயம்பேடு பரவலால் கோடம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திரு.வி.க.,நகர் மண்டலத்தில் 49 பகுதிகள் கட்டுப்படுத்த பகுதிகளும், ராயபுரத்தில் 54 கட்டுப்பாடுத்தப்பட்ட பகுதிகள் என மொத்தம் சென்னையில் 232 பகுதிகள் கட்டுப்படுத்தப் பகுதிகளாக மாற்றப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அண்ணா நகர், தேனாம்பேட்டையிலும்  நோய் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad