கமல் ஹாசன் நினைவைப் பகிர்ந்த அமெரிக்க நடிகை; கமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் விஜய் சேதுபதி?
கமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் விஜய் சேதுபதி?
இந்த படம் ‘தேவர் மகன்’ திரைப்படத்தின் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் தனது நீண்ட கால தாமதமான திட்டமான ‘தலைவன் இருக்கின்றான்' புத்துயிர் பெறுவதாக அறிவித்திருந்தார், மேலும் இப்படம் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த படம் கமல்ஹாசனின் 1992-ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘தேவர் மகன்' திரைப்படத்தின் தொடர்ச்சி என்றும், இதில் முதல் பகுதியிலிருந்து வடிவேலு மற்றும் ரேவதி போன்ற நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இப்போது ஒரு சுவாரஸ்யமான செய்தி இங்கே வலம் வருகிறது. அதாவது, தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தில் பல முக்கிய நடிகர்களுடன் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சேரக்கூடும் என்று கூறப்பட்டாலும், சமீபத்திய புதுப்பிப்பு என்னவென்றால், அவர் படத்தில் நாசரின் மகனாக நடிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தேவர் மகன் கிளைமேக்ஸில் நாசரின் கதாபாத்திரம் கமல்ஹாசனின் கதாபாத்திரத்தால் கொல்லப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கமல் ஹாசன் நினைவைப் பகிர்ந்த அமெரிக்க நடிகை
கமல் ஹாசன் “இந்திய சினிமாவில் மிகப்பெரிய பெயர் கொண்டவர். எந்த அமெரிக்க நடிகரையும் விட பெரியவர்” - மெக்கென்ஸி
அமெரிக்க நடிகை மெக்கென்ஸி வெஸ்ட்மோர் உலகநாயகன் ரசிகர்களுக்கு ஒரு இனிமையான ஆச்சரியத்தை அளித்துள்ளார். ‘பேஷன்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் ‘ஷெரிடன் கிரேன் லோபஸ்-ஃபிட்ஸ்ஜெரால்டு' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக பிரபலமான இந்த நடிகை, பிரபல ஹாலிவுட் மேக்கப் (அலங்காரம்) கலைஞரான மைக்கேல் வெஸ்ட்மோரின் மகளும் ஆவார். அவர், தன்னையும் அவரது தந்தை பற்றிய அன்பான நினைவகத்தைப் பகிர்ந்து கொண்டார்.
மெக்கென்ஸி தனது ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவரும் அவரது தந்தையும் கமல்ஹாசன் பரிசளித்த உடைகளை அணிந்திருக்கிறார்கள். அந்த புகைப்படத்துடன், “எனக்கு கமல் ஹாசனை நன்றாகத் தெரியுமா என்று பலர் கேட்டிருக்கிறார்கள், இங்கே பாருங்கள். நான் ஒரு சிறு பெண்ணாக இருந்தபோது என் அப்பா அவரது ஒப்பனைகளை உருவாக்கிக்கொண்டிருந்தார். நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், ஆனால் கடைசியாக நான் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கமலை பார்த்தேன். 2வது புகைப்படம் கமலின் பரிசாக எங்களுக்கு வழங்கப்பட்ட அழகான ஆடைகளில் நானும் என் அப்பாவும்” என்று தன் நினைவுகளைப் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் ‘தசாவதாரம்' திரைப்படத்தில் மைக்கேல் வெஸ்ட்மோர் இணைந்து பணியாற்றியுள்ளார். முன்னதாக, வெஸ்ட்மோர் ‘அவ்வை சன்முகி' படத்தில் தனது ஒப்பனை குறித்து கமல் ஹாசனுக்கு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். வெஸ்ட்மோர் ‘ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன், டீப் ஸ்பேஸ் நைன், வாயேஜர் மற்றும் எண்டர்பிரைஸ் போன்ற படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.

மெக்கென்ஸியின் இந்த பதிவிற்கு, கமல் ஹாசனைப் பற்றி அறிந்திராத நெட்டிசன் ஒருவர், இவர் யாரென்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்து அருமை என்று பதிவிட்டிருந்தார், அதற்கு உடனடியாக கமெண்டில் பதிலளித்த மெக்கென்ஸி “அவர் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பெயர் கொண்டவர். எந்த அமெரிக்க நடிகரையும் விட பெரியவர்” என்று கூறியுள்ளார். மேலும் மற்றொரு நபர், அவர் படங்களில் நடிக்க வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என வாழ்த்தியதற்கு, “அது என் கனவு” என்றுள்ளார் மெக்கென்ஸி.Many have asked if I know @ikamalhaasan well here ya go :) my dad used to create his makeups when I was a little girl. We keep in touch but the last I saw Kamal was a few years back. The 2nd photo is me and my dad in beautiful clothing given to us as a gift from Kamal ❤️ pic.twitter.com/BxN40imqCx— McKenzie Westmore (@mckenziewestmor) May 19, 2020