வெங்காயம், தக்காளி, பருப்புகள், போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்

வெங்காயம், தக்காளி, பருப்புகள்,  போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்
கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 12-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பான விரிவான திட்டங்களை நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக செய்தியாளர்களை சந்தித்து  அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று 3-வது நாளாக  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில்  கூறியதாவது:-  விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க கடந்த 2 மாதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

ஊரடங்கின் போது உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்காக ரூ.74,300 கோடி வழங்கப்பட்டுள்ளது.  ஊரடங்கின் போது விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கிஷான் திட்டத்தில் ரூ. 18,700 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

பீம் யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 64 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.  விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  குளிர்பதன கிடங்கள் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளுக்கு நிதி செலவிடப்படும்.ரூ.10 ஆயிரம் கோடி சிறு குறு உணவு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உள்ளூரில் தயாரிப்போம் திட்டத்திற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளது. ” என்றார்.

அதன்படி புதிதாக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கடந்த 2 நாட்களாக அறிவித்து வருகிறார். அதன் தொடர்ச்சியான இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ள நிலையில் விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் இன்று வெளியிடப்படுகின்றன.

* இந்தியாவில் பெரும்பாலோனோர் விவசாயத்துறையை சார்ந்தே உள்ளனர். நம் நாட்டு விவசாயிகள் அனைத்து சவாலான சூழல்களிலும் பணியாற்றியுள்ளனர்.

*  இன்று வெளியிடப்படும் 11 அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பு சார்ந்தவை.

* வேளாண்துறை சார்ந்த 11 நிவாரண திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

*  ஊரடங்கு காலத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்கான ரூ.74,300 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* பீமயோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6,400 கோடி நிலுவைத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

*  ஊரடங்கு காலத்தில் விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

* விவசாய கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு

* பதிவு செய்யப்பட்ட இறால் பண்ணைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த சலுகைகள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு

* சிறிய உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. ரூ.10 ஆயிரம் கோடி நிதி மூலம் 2 லட்சம் சிறு நிறுவனங்கள் பயனடையும்.

* இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் வாரியாக நிதி ஒதுக்கப்படும்.

* தமிழகத்தில் மரவள்ளிக் கிழங்கு, ஆந்திராவில் மஞ்சள் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* கடல் மீன்பிடி திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மேலும் மீன்பிடி துறைமுகம், மீன்சந்தைகளின் உள்கட்டமைப்புகளுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு

* கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் மூலம் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காக ரூ.13,343 கோடி ஒதுக்கீடு: 53 கோடி கால்நடைகளுக்கு 100% தடுப்பூசியை உறுதி செய்ய நடவடிக்கை

* தேன் கூட்டு வளர்ப்பிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. தேன்கூட்டு வளர்ப்பிற்கான அரசின் உதவிகள் மூலம் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்

* 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை விவசாயம் அடுத்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் ரூ.5000 கோடி அளவிற்கு விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். மேலும் கூடுதல் உற்பத்தியாகும் இடத்தில இருந்து தேவையுள்ள இடத்திற்கு கொண்டுசெல்ல 50% போக்குவரத்து மானியம் மற்றும் காய்கறி, பழங்களை சேமித்து வைக்க 50% மானியம் வழங்கப்படும்.

* அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இருப்பு வைத்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு கிடைக்கும். தற்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானியம் அனைத்து காய்கறிகள், பழங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் வேளாண் பொருள் விற்பனை செய்ய திட்டம் வகுக்கப்படும். தானியம், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்து, பருப்பு மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.

* மாநிலங்களுக்கு இடையே விளைபொருள்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். விவசாயத்தில் நஷ்டத்தை தவிர்க்க வழிவகை செய்யப்படும். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு விளைபயிரை மையமாக கொண்டு உணவு நிறுவன பூங்காக்கள் அமைக்கப்படும்.

* பால்வள மேம்பாட்டுக்கு ரூ.15,000 கோடியில் திட்டம்: பால், பால்பொருள் உற்பத்தியை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad