சேலத்தில் பரிதாபம் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை; துறையூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

குடும்பத்தகராறில் மனைவி தீக்குளித்து சாவு - கார் டிரைவர் தற்கொலை முயற்சி
சென்னை மதுரவாயல், ஜானகி நகர், முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தாமஸ்(வயது 32). கார் டிரைவர். இவருடைய மனைவி ரஞ்சிதா என்ற எஸ்தர்(27). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் செல்வதற்கு சவாரி ஒன்று வந்திருப்பதாகவும், ஊரடங்கு காலத்தில் இந்த சவாரிக்கு சென்று வந்தால் வருமானம் கிடைக்கும் என மனைவியிடம் கூறினார்.

ஆனால் அவர், தற்போது அங்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து கொள்ளுமாறு கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த எஸ்தர், வீட்டில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். 

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாமஸ், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை எஸ்தர் உயிரிழந்தார்.

தற்கொலை முயற்சி

மனைவி இறந்த செய்தி கேட்ட தாமஸ், துக்கம் தாங்க முடியாமல் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய தாமசை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சேலத்தில் பரிதாபம் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35). இவர் கடந்த 2016-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு சேர்ந்தார். இந்தநிலையில் 2017-ம் ஆண்டு அவர் சேலத்தில் நடந்த விபத்து ஒன்றில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் இதில் குணமடைந்த அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் பணியாற்றினார். இருந்தாலும் அவருக்கு தலையில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் முழுமையாக குணமாகாததால் மனவேதனையில் இருந்து வந்தார்.

தற்கொலை

தற்போது ராமகிருஷ்ணன் திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். தலையில் வலி அதிகமானதால் விடுமுறை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் அவர் சேலம் வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ராமகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ராம கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

துறையூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
துறையூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

துறையூர் அருகே குருவிக்காரன் குளத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி சரண்யா(வயது 27). 9 மாத கர்ப்பிணியான இவர் கடந்த 11-ந்தேதி மாலை கணவருடன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற சரண்யா, அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த புலிவலம் போலீசார், சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் குடித்த முதியவர் சாவு

* புள்ளம்பாடியை அடுத்த ஆலம்பாக்கத்தை சேர்ந்த மணி(65) சம்பவத்தன்று தண்ணீர் என்று நினைத்து பெட்ரோலை குடித்து மயங்கி விழுந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

* கல்லக்குடி அருகே மால்வாய் வடக்கு தெருவை சேர்ந்த பவுன்ராஜ்(44) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடைகளுக்கு சீல்

* திருச்சி மாவட்டத்தில் சமூக விலகலை கடைபிடிக்காத 18 கடைகள் நேற்று முன்தினம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இதுவரை அரசு உத்தரவை மீறி சமூக இடைவெளியை பின்பற்றாமல் வணிகம் செய்த 140 வணிக கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

450 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

* துறையூர், தொட்டியம், வாத்தலை, லால்குடி போலீசார் மற்றும் திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் சாராயம் காய்ச்சியதாகவும், சாராயம் காய்ச்ச முயன்றதாகவும் 12 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 450 லிட்டர் சாராய ஊறலும், 182 லிட்டர் சாராயமும், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

* திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்றதாக புதுகாலனியை சேர்ந்த தினேஷ்(25), மணி(25) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டன.

904 வழக்குகள் பதிவு

* ஊரடங்கு உத்தரவை மீறி தெருக்களில் கூடியவர்கள், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமலும், போக்குவரத்து விதிகளை மீறியும் அதிவேகமாக சென்றவர்கள் என்று மாவட்ட காவல்துறையால் மொத்தம் 904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 118 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் இதுவரை 20,456 பேர் மீது 18,871 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16,161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 9,608 வாகனங்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

5 பேர் கைது

* அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மணப்பாறையில் பெரியார் சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் பாலு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற மணப்பாறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

சாத்தான்குளத்தில் பரிதாபம்: திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த நடு நாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பரமசிவன் (வயது 23). இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள முருங்கைக்காய் கமிஷன் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவருக்கும், இவருடைய அக்காள் மகளான சாத்தான்குளம் அழகம்மன் கோவில் காலனி தெருவைச் சேர்ந்த முத்துலட்சுமிக்கும் (19) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் பரமசிவன் தனது மனைவியின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் பரமசிவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 11-ந்தேதி இரவில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரமசிவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

திருமணமான 5 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

குடும்பத்தகராறில் மனைவி தீக்குளித்து சாவு - கார் டிரைவர் தற்கொலை முயற்சி
சென்னை மதுரவாயல், ஜானகி நகர், முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தாமஸ்(வயது 32). கார் டிரைவர். இவருடைய மனைவி ரஞ்சிதா என்ற எஸ்தர்(27). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் செல்வதற்கு சவாரி ஒன்று வந்திருப்பதாகவும், ஊரடங்கு காலத்தில் இந்த சவாரிக்கு சென்று வந்தால் வருமானம் கிடைக்கும் என மனைவியிடம் கூறினார்.

ஆனால் அவர், தற்போது அங்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்து கொள்ளுமாறு கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த எஸ்தர், வீட்டில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். 

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாமஸ், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை எஸ்தர் உயிரிழந்தார்.

மனைவி இறந்த செய்தி கேட்ட தாமஸ், துக்கம் தாங்க முடியாமல் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய தாமசை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad