கால் முட்டிக் கருமை சங்கடத்தை ஏற்படுத்துகிறதா? இதோ ஹோம் டிப்ஸ்
கால் முட்டிக் கருமை சங்கடத்தை ஏற்படுத்துகிறதா? இதோ ஹோம் டிப்ஸ்
கற்றாழை சதையை முட்டியில் தேய்த்து மசாஜ் செய்ய கருமை நீங்கும். இதை வாரம் 2 - 3 முறை செய்யுங்கள்.
கால் முட்டி கருமை நீங்க இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.
கிரீன் டீ : கிரீன் டீ பையை சுடு தண்ணீரில் முக்கி அந்த பையை அப்படியே முட்டியில் தேய்த்துவர கருமை நீங்கும். இப்படி வாரம் இரு முறை செய்யுங்கள்.
கற்றாழை ஜெல் : கற்றாழை சதையை முட்டியில் தேய்த்து மசாஜ் செய்ய கருமை நீங்கும். இதை வாரம் 2 - 3 முறை செய்யுங்கள்.
மஞ்சள் : மஞ்சள் 1/2 ஸ்பூன், தயிர் அல்லது தேன் 1 ஸ்பூன் கலந்து அந்த பேஸ்டை முட்டியிக் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். பின் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள். இப்படி வாரம் 2 - 3 முறை செய்யுங்கள்.
குறிப்பு : வீட்டுக் குறிப்புகள் மட்டுமல்லாது சன் ஸ்கிரீன், மாய்ஸ்சரைசரை தினமும் தடவி வாருங்கள். முட்டியை வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.