இந்த கிச்சன் பொருட்களை நேரடியாக முகத்தில் அப்ளை செய்யக் கூடாது - ஹோம் டிப்ஸ்
கிச்சன் பொருட்களை நேரடியாக முகத்தில் அப்ளை செய்யக் கூடாது
இயற்கை முறைதானே என அசாதாரணமாக பயன்படுத்துதல் தவறு. இவற்றையும் காஸ்மெடிக்ஸ் போல்தான் கையாள வேண்டும்.
லாக்டவுன் சமையத்தில் பலரும் வீட்டுக்குறிப்புகளை செய்து முகத்தைப் பராமரித்து வருவீர்கள். அப்படி செய்யும்போது கவனமும் அவசியம். இயற்கை முறைதானே என அசாதாரணமாக பயன்படுத்துதல் தவறு. இவற்றையும் காஸ்மெடிக்ஸ் போல்தான் கையாள வேண்டும். இல்லையெனில் சருமத்தை பாதிக்கும். அப்படி எந்தெந்த பொருட்களை முகத்தில் நேரடியாக அப்ளை செய்யக் கூடாது என்று பார்க்கலாம்.
எலுமிச்சை : எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் நேரடியாக அப்ளை செய்யும்போது சருமத்தை எரித்துவிடும் எனவே தண்ணீரிலோ மற்ற பொருட்களிலோ கலந்துதான் அப்ளை செய்ய வேண்டும்.
டூத் பேஸ்ட் : டூத் பேஸ்டை முகப்பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்வார்கள். அது பருவை சுருங்கச் செய்யும். அதேசமயம் சருமத்தை அரிக்கும். அந்த இடத்தில் தழும்பை உண்டாக்கும்.
பேக்கிங் சோடா : பேக்கிங் சோடாவும் எலுமிச்சை போன்றுதான். எனவே இதை நேரடியாக அப்ளை செய்தால் பக்கவிளைவுகளை சந்திப்பீர்கள்.
வினிகர் : ஆப்பில் சிடர் வினிகர் அல்லது சாதாரண வினிகர் எதுவானாலும் அதன் ஆற்றல் அதிகமாக இருக்கும். கருமையான நிறமியை உண்டாக்கும்.
உப்பு மற்றும் சர்க்கரை : உப்பு மற்றும் சர்க்கரை இரண்டுமே கூர்மையானவை. அவை சருமத்தை சேதப்படுத்தலாம். குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.