தமிழின காவலன் திமுக - தொகுப்பு

தமிழின காவலன் திமுக - தொகுப்பு 


தமிழக தொழிற்துறை வரலாற்றில், ஒரே இடத்தில் பல தொழில்கள் உருவாவதற்கு வகை செய்யும் தொழில் வளாகங்களை முதன்முதல் அமைத்த பெருமை கழக அரசுக்குத்தான் உண்டு.  இதற்காக, 1970-களில் தொழிற்மயமாக்குவதற்கான நிறுவனங்களை தி.மு.க அரசு ஏற்படுத்தியது.

1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் 6,993 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. இவற்றில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 967 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், 2010-ம் ஆண்டுத் தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 515 ஆக உயர்ந்தது.

அவற்றில் வேலை பார்த்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 45 ஆயிரத்து 928 ஆக அதிகரித்தது. தி.மு.க அரசு கடைபிடித்த தொழிலாளர் கொள்கையும், தொழில் முனைவோருக்கு அளித்த பல்வேறு ஊக்கமும் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் பெருக காரணமாய் அமைந்தன.

தமிழகத்தில் முதன்முறை கழக அரசு பொறுப்பேற்றவுடன், உலகத்தரம் வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிக்கும் சேலம் உருக்காலை-யை 1970-ம் ஆண்டு தமிழகத்துக்கு கொண்டு வந்தார் தலைவர் கலைஞர்.

சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு 1970-ம் ஆண்டு சிட்கோ நிறுவனத்தையும், பெரும் தொழில்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக 1971-ம் ஆண்டு “சிப்காட்” எனப்படும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தையும் கழக அரசு உருவாக்கியது.

இவற்றுடன், 1971-ம் ஆண்டு திமுக ஆட்சியில் திருத்தம் செய்யப்பட்ட நில உச்சவரம்பு சட்டமும் தொழில் வளர்ச்சிக்கு, பெரும் பங்காற்றியது

இதன் பிறகு 1989-ம் ஆண்டு மீண்டும் ராணிப்பேட்டையில் 133 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் உருவாக்கப்பட்டு, 99 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன.

இதன் மூலம், 3,400 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல், ஓசூரிலும் 457 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் தொடங்கப்பட்டு, 64 புதிய தொழில்களுடன் ஏறத்தாழ 6 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

1996-ம் ஆண்டு நான்காவது முறையாக கழக அரசு அமைந்த பிறகு, திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி, செய்யாறு, நெமிலி ஆகிய இடங்களில் சிப்காட் நிறுவனத்தால் புதிய தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டடன.

1996-ம் ஆண்டு இருங்காட்டுக் கோட்டையில், 2,450 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 1 லட்சத்து 20,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனுடன் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கழக ஆட்சியின்போது தொடங்கி வைக்கப்பட்டது.

ஏறத்தாழ 2,500 தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பினையும், 25,000 தொழிலாளர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பினையும் வழங்கிய ஹூண்டாய் தொழிற்சாலை, வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கணிசமான அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்தது.

இதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாடு தொழிற்துறை முன்னேற்றத்துக்கென 1997-ம் ஆண்டு ‘நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டு வந்தது கழக அரசு. இந்தச் சட்டம் மூலம் தொழில் வளர்ச்சிக்கென நிலத்தை கையகப்படுத்துவது எளிதாகியது.

தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகள் வழங்கவும் புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1998-ம் ஆண்டு, திருவள்ளூரில் மிட்சுபிசி லேன்சர் கார் தொழிற்சாலை ஆண்டுக்கு ஒரு லட்சம் கார் தயாரித்திடும் ஆற்றலுடன், ஏறத்தாழ 320 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இங்கு, 800 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பும், 6,400 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பு.

1999-ம் ஆண்டு சென்னை அடுத்த மறைமலைநகரில் 1,700 கோடி ரூபாய் முதலீட்டில் ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

ஆண்டுக்கு 1 லட்சம் கார்களைத் தயாரித்திடும் திறனுடன் தொடங்கி வைக்கப்பட்ட இத்தொழிற்சாலை, 2,000 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பையும், 10,000 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பையும் வழங்கியது.

சேலம் அயர்ன் அண்டு ஸ்டீல் கம்பெனி லிமிடெட் தொழிற்சாலை 500 கோடி ரூபாய் முதலீட்டில் 31.3.99 அன்று தொடங்கப்பட்டது.

ஜி.எம்.ஆர்.வாசவி தனியார் மின் உற்பத்தித் திட்டம் 825 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை பேசின் பிரிட்ஜில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது.

தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில் துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டம் 202 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 நவம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் உரம் தயாரிக்கும் ஸ்பிக் தொழிற்சாலை, ஆலங்குளத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

இருங்காட்டுக் கோட்டையில் ரெனால்ட்ஸ் பால் பென் காம்பொனன்ட்ஸ் தொழிற்சாலை 30 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியைத் தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், 2,800 ஏக்கர் பரப்பளவில் 110 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பெருந்துறை வளர்ச்சி மையம் 2000-மாவது ஆண்டு ஜூலை 1-ம் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

ஆப்டிக் பைபர் கேபிள் தொழிற்சாலை தமிழ்நாடு அரசு நிறுவனமான டிட்கோ, மத்திய அரசு நிறுவனமான டி.சி.ஐ.எல்.

ஜப்பான் நாட்டின் ஃப்யூஜிகூரா நிறுவனம் ஆகியவை இணைந்து மிக நவீனமான ஆப்டிக் பைபர் டெலிகாம் கேபிள்ஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 28.50 கோடி ரூபாய் செலவில் 26.5.2000 அன்று நிறுவியது கழக அரசு.

தொழிற்சாலைகளுக்கான வாயுக்களை தயாரிக்கும் ப்ராக்ஸ் ஏர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (PRAX AIR INDIA PRIVATE LIMITED) தொழிற்சாலை 60 கோடி ரூபாய் முதலீட்டில் 21.8.2000 அன்று திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிறுவனம் மொத்தம் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு தொழில் பிரிவுகளை அமைத்துள்ளது.

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பிரெஞ்சு நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 525 கோடி ரூபாய் செலவில் செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை 27.9.2000 அன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம், ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் அளவுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கப் பெற்றது.

ஓசூரில்,24.85 கோடி ரூபாய் முதலீட்டில் மலர் பதப்படுத்தும் டான் ப்ளோரா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்க்- மலர்த் தொழில் பூங்கா 220 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் 500 பேருக்கு நேரடியாகவும், 1,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மெட்ராஸ் ரீபைனரீஸ் நிறுவனத்தின் மணலி தொழிற்சாலை பிரிவு 2,360 கோடி ரூபாய் செலவில் 30 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்யும் திறனுடையதாக விரிவுபடுத்தப்பட்டது.

கணினியைப் பயன்படுத்தி நெடுந்தொலைவுக்கு அப்பால் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ வல்லுநர்களிடமிருந்து அறிவுரை மற்றும் வழிகாட்டுதலுடன்,நவீன மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு Tele Medicine எனப்படும் தொலைத்தொடர்பு வழி மருத்துவ வசதியும் கழக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்திலுள்ள தேயிலை, ஜவ்வரிசி,கயிறு,தீப்பெட்டி, கைவினைப் பொருட்கள் முதலியவை சார்ந்த 335 தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1996–2001 கழக ஆட்சியின்போது, முதல் நான்கரை ஆண்டுகளில் மட்டும் 1,630 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

இதே காலகட்டத்தில், 4,715 சிறு தொழில் நிறுவனங்களுக்கு 93.54 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்பட்டது. 14,779 சிறுதொழில் நிறுவனங்களுக்கு 32 கோடி ரூபாய் குறைந்த அழுத்த மின்கட்டண மானியமாக வழங்கப்பட்டது.

மேலும், 1,43,562 சிறுதொழில் நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் மூலம் 2,813.38 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. 12 லட்சத்து 66 ஆயிரத்து 21 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன.

ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தவை.

தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும். நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது.

தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து கழக அரசு சிறப்பாக செயல்பட்டது.

1996 – 2001 தி.மு.க ஆட்சியில் தொழில் அமைதியில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்தது. தொழிலாளர் தகராறு காரணமாக தமிழகத்திலே எந்தவொரு பெரிய தொழில் நிறுவனத்திலும், நீண்ட நாள் வேலை நிறுத்தம், கதவடைப்பு போன்ற நிகழ்வுகள் பெறவில்லை என்பதே, நமது தொழிலாளர் நலக் கொள்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.

கழக ஆட்சியின்போது, அகில இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியினை ஆராய்ந்து இந்திய தொழிற்குழுமம் (Confederation Of Indian Industry) ஒரு அறிக்கை தயார் செய்தது.

அந்த அறிக்கையில், இந்தியாவிலேயே தொழில் அமைதி நிலவுவதிலும், தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதிலும் தமிழகம் முதல் இடம் வகிக்கின்றது என்றும் குஜராத் இரண்டாவது இடம் என்றும் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுமார் 2,500 பேர் 1996 – 2001 கழக ஆட்சியின்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.

தமிழ்நாடு மின் வாரியத்திற்குச் சொந்தமான நான்கு அனல் மின் நிலையங்களிலும் இரண்டு எரிவாயு சுழல் மின் நிலையங்களிலும் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 7,651 பேர் 1-1-1999 முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.

1996-ம் ஆண்டின் தொடக்கத்தில் கழக ஆட்சியின்போது பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 23,053 என்றிருந்தது.

பெரும்பான்மையான பொருள்கள் மீதிருந்த பலமுனை வரியை நீக்கி 1989 – 90-ம் ஆண்டில் கழக ஆட்சியின்போது ஒருமுனை வரி கொண்டுவரப்பட்டது.

பின்னர் வந்த அ.தி.மு.க ஆட்சியில் பல பொருட்களுக்குப் பலமுனை வரி விதிக்கப்பட்டது. 1996-ல் மீண்டும் கழா அரசு பொறுப்பெற்றவுடன், எல்லாப் பொருட்களின் மீதும் பலமுனை வரியை அகற்றி ஒருமுனை வரியாக மாற்றம் செய்யப்பட்டது.

1975-ம் ஆண்டு இறுதியில் திராவிட முன்னேற்றக் கழக அரசால் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட “தமிழ்நாடு வணிகர் நல வாரியம்” 1976 ஜனவரியில் கழக அரசு கலைக்கப்பட்டமையால் தொடங்கப்படவில்லை.

பின்னர், 1989-ம் ஆண்டு கழக அரசு மீண்டும் அமைந்தபோது, 25.9.1989 அன்று வெளியிடப்பட்ட ஆணையின்படி தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தொடங்கப்பட்டு, 28.9.2000 வரை 35,352 வணிகர்கள் ஆயுள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக 1999-2000 நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்முன் மாநிலத்திலுள்ள அனைத்து வர்த்தகச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் ஆகியோரை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டு வரிச்சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதுபோலவே, 2000 -2001 நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன்பும் 11.3.2000 அன்று கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன.

தொழிற்சாலை பெருக்கம், வணிகம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகளை விரைந்து பெறுவதற்கு போக்குவரத்து சிறப்பாக இருப்பது முக்கியம்.

இதை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1976-க்கு முன்பே தீட்டி அதில் வேகமான வளர்ச்சி கண்டது என்பதை அனைவரும் அறிவர்.

அண்ணா தலைமையில் முதன்முறை திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றுக்கொண்டபோது, நாட்டிலேயே முதன்முறையாகத் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் பேருந்துகள் நாட்டுடமையாக்கப்பட்டன.

1998 மார்ச் 26-ம் நாள் தமிழக வரலாற்றில் முதன்முறையாக நெடுஞ்சாலைத் துறைக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் அதிகப்படியான சாலைகளும், பாலங்களும் அமைக்கப்பட்டன.

2000-மாவது ஆண்டு முடியும்போது, தி.மு.க ஆட்சிக் காலத்தில் மட்டும் 345 பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டிருந்தன.

1996 – 2001 தி.மு.க ஆட்சிக் காலத்தில் நான்கரை ஆண்டுகளில் மட்டும் 9,477 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, 1,468 புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

கிராமப்புற மக்கள் வேலைக்குச் சென்றுவர வசதியாக மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2,334 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 2,112 மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad