அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம்- முதல்வர் பழனிசாமி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம்- முதல்வர் பழனிசாமி
மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய  பிறகு முதல்வர் பழனிசாமி  கூறியதாவது:  மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். சென்னையில் இருந்து சொந்த மாவட்டங்கள் சென்ற அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும்.  மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது.  சென்னையில் நெரிசலான பகுதிகளில் 26 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையை முதலில் வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால், வியாபாரிகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு என்று கணித்து முன்னரே எச்சரிக்கப்பட்டது. கோயம்பேடு சந்தையில் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.  சென்னைக்கு வெளியே அமைக்கும் தற்காலிக சந்தைக்கு செல்ல வியாபாரிகள் விரும்பவில்லை.

 கொரோனா பரவலை தடுக்க அரசு கடுமையான முயற்சிகளை கொண்டுள்ளது. கோயம்பேடு சந்தை வியாபாரிகளை அரசு பலமுறை  அழைத்து பேசியது. நோய் பரவல் காரணமாக சந்தை மூடப்பட்டது. நோய் பரவலை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டது. அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது.

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை படிப்படியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அநாவசியமாக வெளியில் செல்வதை  மக்கள் தவிர்க்க வேண்டும்.  வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.  அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம்.  பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதியை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.என்றார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது;

* தமிழ்நாட்டில் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. விவசாய விலை பொருட்கள் போக்குவரத்துக்கு தடை இல்லை.

* சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

* மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிர நிலையில் உள்ளது.

* மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.

* தமிழகத்தில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை.

* கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படும் என முன்பே கணித்து அரசு எச்சரிக்கை விடுத்தது. எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் ஏற்கவில்லை.

* சென்னையில் இருந்து சென்றவர்களால்தான் மற்ற பகுதிகளில் கொரோனா பரவியது. கோயம்பேடு சந்தைக்கு 20 ஆயிரம் பேர் சென்று வந்துள்ளனர்.

* மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

* சென்னையில் நெரிசலான பகுதிகளில் 26 லட்சம் மக்கள் வசித்து வருகின்றன.

* தமிழகத்தில் அரசின் முயற்சியால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

* அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம்.

* பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபமல்ல.

* வெளியில் செல்லும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

* தமிழகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறோம்.

* 10 வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பேருந்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

* படிப்படியாக அனைத்து தொழிலாளர்களும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

* பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்த பிற இடங்களில், 50 சதவீத தொழிலாளர்களுடன், தொழிற்சாலைகள் இயங்கலாம்.

* விதிகளை மீறி சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 நாட்கள் கழித்து திறக்கலாம்.

* அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு.

* கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

* அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பாராட்டு.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad