திருச்சி அருகே சித்தாள் வேலைக்கு சென்ற சிறுமி கடத்தல் கொத்தனார் மீது போலீசில் புகார்; பிரசவத்திற்கு வந்த போது விபரீதம்: தந்தை கொலை உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
திருச்சி தொட்டியம் அருகே சித்தாள் வேலைக்கு சென்ற சிறுமி கடத்தல் கொத்தனார் மீது போலீசில் புகார்
தொட்டியம் அருகே சித்தாள் வேலைக்கு சென்ற சிறுமியை கடத்தியதாக கொத்தனார் மீது பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சிறுமி கடத்தல்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் குடித்தெருவை சேர்ந்தவர் சேவுகன். இவரது மகன் ரவிக்குமார்(வயது 32). பி.எட் பட்டதாரியான இவருக்கும், கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியை சேர்ந்த ராஜாமணி(30) என்பவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால் அப்பகுதியில் நடைபெறும் கட்டிடங்களில் கொத்தனார் வேலைக்கு ரவிக்குமார் சென்று வந்தார். அப்படி வேலைக்கு சென்ற இடத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் சித்தாளாக வேலை பார்த்து வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி வேலைக்கு சென்ற தனது மகளை காணவில்லை, அவரை ரவிக்குமார் கடத்தி சென்றுவிட்டதாக சிறுமியின் தந்தை தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார் மற்றும் சிறுமியை தேடி வருகின்றனர்.

பிரசவத்திற்கு வந்த போது விபரீதம்: தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண் - உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்
கல்பாக்கம் அடுத்த வடபட்டினம் கிராமம் காட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஏகவள்ளி (38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகள் நந்தினி (19), அருணகிரி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் நந்தினி தனது முதல் பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த சில மாதங்கள் முன்பு வந்து இருந்தார்.

இதற்கிடையே சேகருக்கும் அவரது மனைவி ஏகவள்ளிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் சேகருக்கும் அவரது மனைவிக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.

இதைக்கண்ட மகள் நந்தினி சேகரை கண்டித்துள்ளார். இதனால் சேகருக்கும், அவரது மகள் நந்தினிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு முற்றியதில், நந்தினி அருகில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து திடீரென தனது தந்தை சேகரின் இடது மார்பில் குத்தியுள்ளார்.

மகள்- மனைவி கைது

இதனால் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த விழுந்த சேகரை, அருகில் உள்ளவர்கள் மீட்டு கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை குத்திக்கொன்ற வழக் கில் மகள் நந்தினியை கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஏகவள்ளியும் கைது செய்யப்பட்டார். தாய், மகள் இருவரும் திருக்கழுகுன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad