திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் பயிற்சிக்கு வந்த பெண் உள்பட 18 பேருக்கு கொரோனா; ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் எதிரொலி: சமூக இடைவெளியை மறந்து வீதி உலா வந்த மக்கள்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் பயிற்சிக்கு வந்த பெண் உள்பட 18 பேருக்கு கொரோனா உறுதி
திருவண்ணாமலையைச் சேர்ந்த 24 வயது பெண், போலீஸ் பயிற்சிக்காக மாங்காட்டில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். சென்னை மவுண்டில் நடைபெற்ற போலீஸ் பயிற்சிக்கு சென்று வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

அதேபோல் திருமுல்லைவாயல் குளக்கரை தெருவைச் சேர்ந்த 26 வயதான காவலர் பயிற்சிக்கு தேர்வான பெண் போலீசுக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவரும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தவிர அயப்பாக்கம் பகுதியில் ஒருவருக்கும், மீஞ்சூரில் 2 பேருக்கும், கும்மிடிப்பூண்டியில் ஒருவர், எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டையில் ஒருவர் உள்பட இன்று  திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேர் இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது.

இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆனது. இவர்களில் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 46 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் எதிரொலி:சமூக இடைவெளியை மறந்து வீதி உலா வந்த மக்கள்
ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் மக்கள் சமூக இடைவெளி என்பதை மறந்து வீதிகளில் சுய கட்டுப்பாடு இன்றி உலா வந்தனர்.

கொரோனா எனும் கொடிய நோய்க்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. தற்போதைக்கு சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள், முக கவசம் அணியுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க அரசு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கை அமல்படுத்தியது. 21 நாட்கள் ஊரடங்கை தொடர்ந்து கடந்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி ஊரடங்கு மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டு மே 17-ந் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3-வது முறையாக அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக் கப்பட்டன. இதன் எதிரொலி யாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல கடைகள் திறக்கப்பட்டன. இதை அறிந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்தனர். வங்கிகளின் வாசலிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு நின்றதை காண முடிந்தது.

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சமூக இடைவெளி என்பதை மறந்து மக்கள் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக உலா வந்தனர். இதில் பெரும்பாலானோர் முக கவசம் அணியவில்லை.

அதேபோல் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள கடைகள், வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மேலவீதி, காசுகடைதெரு உள்ளிட்ட இடங் களில் கூடி நின்ற மக்கள் சமூக இடைவெளி என்றால் என்னவென்றே தெரியாதது போல நடமாடினர். திறக்கப்பட்ட கடைகளில் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோல் மணப்பாறை, வையம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அதிக அளவில் கடைகள் திறந்திருந்தன. இங்கு வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திண்டுக்கல் சாலையில் வங்கிகள் செயல்படும் பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. பலர் முககவசம் அணியாமல் வாக னங்களிலும், கடைவீதியிலும் உலா வந்ததை காண முடிந்தது. இதே நிலை நீடித்தால் தொற்று இல்லாத பகுதியாக உள்ள மணப்பாறை நகராட்சிப் பகுதியும் கொரோனா தொற்றிற்கு ஆட்பட்டு விடும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.

திருவெறும்பூர், துவாக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 7 மணி முதலே அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதேபோல் கட்டிட வேலைகளுக்கு ஆட் களை பிரித்து அவரவர் வேலை பார்க்கும் இடங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் காரணமாக திருவெறும்பூர் பகுதியில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதி யது.

தொட்டியம் பகுதியில் ஊரடங்கு தளர்த்தப்படாத தால் தொட்டியம், மணமேடு, கொளக்குடி, பாலசமுத்திரம் பகுதிகளில் நேற்று கடைகள் எப்போதும் போல் ஒரு மணிக்கே அடைக்கப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின் பற்ற போவதாக அப்பகுதி வணிகர்கள் தெரிவித்தனர். ஒரு சில கடைகள் மட்டும் 5 மணி வரை திறந்திருந்தன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad