பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது

பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது
பாகிஸ்தானில் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில்தான் உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏ320-ஏர்பஸ் ரக விமானம், பாகிஸ்தானில் லாகூரில் இருந்து கராச்சிக்கு புறப்பட்டது. அதில், 90 பயணிகளும், 10 சிப்பந்திகளுமாக மொத்தம் 100 பேர் இருந்தனர்.

கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது, என்ஜின் கோளாறு ஏற்பட்டது. அதனால் தரை இறங்க முடியவில்லை. அதனால், விமான நிலையத்துக்கு மேலே விமானம் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இரண்டு, மூன்று தடவை முயற்சித்தும் தரை இறங்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, எதிர்பாராமல், விமான நிலையத்துக்கு அருகே உள்ள மாடல் காலனி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url