இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டியது; கடும் எதிர்ப்பு: 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடுகளுக்கு அனுமதி; #IndiaforSale டுவிட்டரில் டிரெண்டிங்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,649ல் இருந்து 2,752 ஆக நேற்று உயர்வடைந்துள்ளது.  30 ஆயிரத்து 153 பேர் குணமடைந்தும், 53 ஆயிரத்து 35 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்து 940 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 120 பேர் இன்று பலியாகி உள்ளனர்.  இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,752ல் இருந்து 2,872 ஆக உயர்வடைந்துள்ளது.  34 ஆயிரத்து 109 பேர் குணமடைந்தும், 53 ஆயிரத்து 946 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்துள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்து 940ல் இருந்து 90 ஆயிரத்து 927 ஆக உயர்வடைந்து உள்ளது.

கடந்த 1ந்தேதி இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,147 ஆக இருந்தது.  இதேபோன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக இருந்தது.  16 நாட்கள் கடந்த நிலையில், இந்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இரட்டிப்புக்கும் மேல் அதிரடியாக உயர்ந்து உள்ளது.  இதேபோன்று சீனாவில் 82 ஆயிரத்து 947 பேருக்கு மேல் பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், இந்தியா இந்த எண்ணிக்கையை கடந்து சென்று உள்ளது.  ஈரான் நாட்டு எண்ணிக்கையை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா  வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 120 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 2,872 பேர் உயிரிழந்த நிலையில், 34,109  பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1135 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 7088 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் மீண்டும் குஜராத் மாநிலம் 2-வது இடத்திற்கு வந்துள்ளது.  நேற்று 3-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் 10,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 625  பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4308 பேர் குணமடைந்துள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் மீண்டும் 3-வது இடத்திற்கு சென்றுள்ளளது.  தமிழகத்தில் 10,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 74 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 3538 பேர்  குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய 11-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 92 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.
பீகாரில் 1179 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 453 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 191 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 51 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 67 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 56 பேர் குணமடைந்தது.

கோவாவில் 17 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 9333 பேருக்கு பாதிப்பு; 129 பேர் பலி; 3926 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 887 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 514 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 167 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 64 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 587 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 495 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 4960 பேருக்கு பாதிப்பு; 126 பேர் பலி; 2839 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 217 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 113 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 3 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 737 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 196 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1946 பேருக்கு பாதிப்பு; 32 பேர் பலி; 1257 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 88 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 51 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 1092 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 496 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 1121 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 542 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1509 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 971 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2576 பேருக்கு பாதிப்பு; 232 பேர் பலி; 872 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 4258 பேருக்கு பாதிப்பு; 104 பேர் பலி; 2441 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2355 பேருக்கு பாதிப்பு; 49 பேர் பலி; 1353 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 4789 பேருக்கு பாதிப்பு; 243 பேர் பலி; 2315 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 78 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

கடும் எதிர்ப்பு: 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடுகளுக்கு அனுமதி; #IndiaforSale டுவிட்டரில் டிரெண்டிங்
கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 3 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 52 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 17ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது.  மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தி  இந்தியா உலகளவில் 11-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, மே 17ம் தேதிக்கு பிறகான திட்டம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம்  பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 5வது முறையாக கடந்த 12-ம் தேதி இரவு 8  மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடிக்கான சலுகையை அறிவிக்கிறேன். ரூ..20 லட்சம் கோடி நிவாரண நிதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் நாளை விரிவான  விளக்கம் அளிக்கும் என்றார்.

அதன்படி, அதற்கு மறுநாள் புதன் கிழமையில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்து  வருகிறார். முதல் நாளில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான 15 அம்ச திட்டங்களையும், 2ம் நாளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன் பெறும் திட்டங்களையும், 3ம் நாளில் விவசாயம்,  கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 அம்ச திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, 4ம் நாளான நேற்று, கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி (இஸ்ரோ), அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய 8 முக்கிய  துறைகளில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இத்துறையில் போட்டி, வெளிப்படைத்தன்மை மற்றும் தனியார் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிலையில், 8 முக்கிய துறைகள் தனியாரிடம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #IndiaforSale என்ற ஹெஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இணையவாசிகள், இந்த ஹெஷ்டேக் மூலம் தங்கள் எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.  இந்த ஹெஷ்டேக் தற்பொது டுவிட்டரில் இந்தியளவில் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று 11 மணிக்கு அறிவிப்பு;

தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்து வருகிறார். ஆனால், இன்று காலை 11 மணிக்கு  அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad