இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,000-ஐ நெருங்கியது; உத்தர பிரதேசத்தில் லாரிகள் மோதல்: புலம்பெயர் தொழிலாளர்கள் 23 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,000-ஐ நெருங்கியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 103 பேர் இன்று பலியாகி உள்ளனர். இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,649ல் இருந்து 2,752 ஆக உயர்வடைந்துள்ளது. 30 ஆயிரத்து 153 பேர் குணமடைந்தும், 53 ஆயிரத்து 35 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 81 ஆயிரத்து 970ல் இருந்து 85 ஆயிரத்து 940 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 1ந்தேதி இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,147 ஆக இருந்தது. இதேபோன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக இருந்தது. 15 நாட்கள் கடந்த நிலையில், இந்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிரடியாக இரட்டிப்படைந்து உள்ளது. இதேபோன்று சீனாவில் 82 ஆயிரத்து 900 பேருக்கு மேல் பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், இந்தியா இந்த எண்ணிக்கையை கடந்து உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,000-ஐ நெருங்கியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,940 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3970 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 2,752 பேர் உயிரிழந்த நிலையில், 30,153 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 29,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1068 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6564 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 10,108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2599 பேர் குணமடைந்துள்ளனர். 3-வது இடத்தில் 9931 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு, 606 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4035 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய 11-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில வாரியாக விவரம்:
அசாமில் 90 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.
பீகாரில் 1018 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 438 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 191 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 37 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 66 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 56 பேர் குணமடைந்தது.
கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 8895 பேருக்கு பாதிப்பு; 123 பேர் பலி; 3518 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 818 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 439 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 156 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 42 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 576 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 492 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 4727 பேருக்கு பாதிப்பு; 125 பேர் பலி; 2677 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 203 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 87 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 3 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 672 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 166 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1935 பேருக்கு பாதிப்பு; 32 பேர் பலி; 305 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 82 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 51 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 1056 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 480 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 1013 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 513 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1454 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 959 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2461 பேருக்கு பாதிப்பு; 225 பேர் பலி; 829 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 2307 பேருக்கு பாதிப்பு; 48 பேர் பலி; 1252 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 4595 பேருக்கு பாதிப்பு; 239 பேர் பலி; 2283 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 4057 பேருக்கு பாதிப்பு; 95 பேர் பலி; 2165 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 76 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.
உத்தர பிரதேசத்தில் லாரிகள் மோதல்: புலம்பெயர் தொழிலாளர்கள் 23 பேர் பலி
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக தென்பகுதி மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து உள்ளனர். ஊரடங்கை முன்னிட்டு வேலைவாய்ப்பின்றி, வருவாயும் இன்றி, கையில் இருந்த பணமும் செலவான நிலையில், தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது என அவர்கள் முடிவு செய்தனர்.
ஆனால், பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், பலர் சரக்கு வாகனங்களில் பயணித்து தங்களது ஊருக்கு சென்றடைகின்றனர்.
பலர் கால்நடையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர். அவர்களில் சிலர் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் என தங்களது குடும்பத்தினரையும் அழைத்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் வசதிக்காக அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு ரெயில்களில் அவர்களை அனுப்பி வைத்து வருகிறது. இது தவிர்த்து அவர்களுக்கான உணவு தேவையையும் பூர்த்தி செய்கிறது. இதனால் லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை அடைந்த திருப்தியில் உள்ளனர். அவர்களுக்கான பயண செலவுகளை ஏற்கவும் சில மாநில அரசுகள் முன்வந்தன.
எனினும், முறையான அடையாள அட்டை இல்லாதது அல்லது ஊருக்கு திரும்புவதில் காலதாமதம் ஏற்படுவது ஆகிய காரணங்களால், சிலர் கிடைத்த வாகனங்களை பிடித்து பயணம் செய்கின்றனர்.
இதேபோன்று ராஜஸ்தானில் இருந்து சொந்த ஊருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் லாரி ஒன்றில் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்களது வாகனம் உத்தர பிரதேசத்தின் ஆரையா என்ற பகுதியில் வந்தபொழுது, அதிகாலை 3.30 மணியளவில் மற்றொரு லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் பலர் பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்டை சேர்ந்தவர்கள்.
சமீப நாட்களில், நாடு முழுவதும் சொந்த ஊருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வது அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மராட்டியத்தில் 16 பேர் ரெயில் மோதி பலியானார்கள்.
கடந்த 13ந்தேதி இரவில், மராட்டியத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்த உத்தர பிரதேச தொழிலாளர்கள் சிலர் லாரி ஒன்றில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபொழுது, மத்திய பிரதேசத்தின் குணா என்ற பகுதியில் எதிரே வந்த பேருந்து ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், தொழிலாளர்கள் 8 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதேபோன்று அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பஞ்சாபில் இருந்து பீகாரிலுள்ள சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது, உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று மோதியது. இதில், 6 பேர் பலியாகினர்.