இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,000-ஐ தாண்டியது; "வாய் மூடி பேசவும்" கொரோனா பேச்சு வழியாக பரவக்கூடும்- ஆயவில் தகவல்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,000-ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 100 பேர் இன்று பலியாகி உள்ளனர். இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 100 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,549ல் இருந்து 2,649 ஆக உயர்வடைந்துள்ளது. 27 ஆயிரத்து 920 பேர் குணமடைந்தும், 51 ஆயிரத்து 401 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்து 3ல் இருந்து 81 ஆயிரத்து 970 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 1ந்தேதி இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,147 ஆக இருந்தது. இதேபோன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக இருந்தது. இந்நிலையில், கடந்த 15 நாட்களில் இந்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இரட்டிப்படைந்து உள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 27,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1019 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6059 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் கடந்த 4 நாட்களாக 3-வது இடத்தில் இருந்த தமிழகம் இன்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 9674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2240 பேர் குணமடைந்துள்ளனர். 3-வது இடத்தில் 9591 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு, 586 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3753 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநில வாரியாக விவரம்:
அசாமில் 87 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
பீகாரில் 994 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 411 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 191 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 37 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 60 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 56 பேர் குணமடைந்தது.
கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 8470 பேருக்கு பாதிப்பு; 115 பேர் பலி; 3045 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 818 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 439 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 156 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 29 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 560 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 491 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 4534 பேருக்கு பாதிப்பு; 125 பேர் பலி; 2580 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 197 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 87 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 611 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 158 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1935 பேருக்கு பாதிப்பு; 32 பேர் பலி; 223 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 78 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 50 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 987 பேருக்கு பாதிப்பு; 35 பேர் பலி; 460 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 983 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 485 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1414 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 950 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2377 பேருக்கு பாதிப்பு; 215 பேர் பலி; 768 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 2205 பேருக்கு பாதிப்பு; 48 பேர் பலி; 1192 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 4426 பேருக்கு பாதிப்பு; 237 பேர் பலி; 2171 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 3902 பேருக்கு பாதிப்பு; 88 பேர் பலி; 2072 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 74 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.
"வாய் மூடி பேசவும்" கொரோனா பேச்சு வழியாக பரவக்கூடும்- ஆயவில் தகவல்
நோயாளிகள் பேசும் போது கொரோனா பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (என்ஐடிடிகே) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் (பிஎன்ஏஎஸ்) புரோசிடிங்ஸ் இதழில் வெளியிடப்படடு உள்ளது.
ஆய்வில் ஒரு நபர் மூடிய பெட்டியின் உள்ளே 25 விநாடிகள் “ஆரோக்கியமாக இருங்கள்” என்ற சொற்றொடரை சத்தமாக மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.பெட்டியில் பொருத்தப்பட்ட்ட ஒரு லேசர் நீர்த்துளிகளை ஒளிரச் செய்து, அவற்றைக் காணவும் எண்ணியும் ஆய்வு செய்யப்பட்டது. நீர்த்துளிகள் அவைகள சராசரியாக 12 நிமிடங்கள் காற்றில் தங்கியிருந்தன,
ஒரு நபர் பேசும் போது உருவாகும் மைக்ரோ நீர்த்துளிகள் சுமார் 12 நிமிடங்களுக்கும் மேலாக ஒரு மூடப்பட்ட இடத்தில் காற்றில் தங்கி இருக்கும்,
உமிழ்நீரில் கொரோனா வைரஸின் செறிவை கணக்கில் எடுத்துக்கொண்டு, விஞ்ஞானிகள் ஒவ்வொரு நிமிடமும் சத்தமாக பேசினால் 1,000 க்கும் மேற்பட்ட வைரஸ் கொண்ட நீர்த்துளிகள் எட்டு நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் மூடிய இடத்தில் காற்றில் இருக்கும் என மதிப்பிட்டு உள்ளனர்.
"இந்த நேரடி காட்சிப்படுத்தல் சாதாரண பேச்சு வான்வழி நீர்த்துளிகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதை நிரூபிக்கிறது. அவை பல்லாயிரம் நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நிறுத்தி வைக்கப்படலாம், மேலும் அவை வரையறுக்கப்பட்ட இடங்களில் நோயைப் பரப்பும் திறனைக் கொண்டுள்ளன" என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.