ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக்கசிவு? குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது?
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையிலிருந்து இன்று காலை வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. வாயுக்கசிவு ஆலை அமைந்துள்ள பல மீட்டர் பகுதிகளில் பரவி உள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் வாயுவை சுவாசித்தால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி ஏற்பட்டுள்ளது. சிலர் மயங்கி விழுந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் குழந்தை உட்பட 8 பேர் மரணமடைந்துள்ளனர். ஆலையை சுற்றி சுமார் 3 கி.மீ பரப்பில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக்கசிவு? குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு; என்ன நடந்தது?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆர்.ஆர். வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையிலிருந்து இன்று காலை வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. வாயுக்கசிவு ஆலை அமைந்துள்ள பல மீட்டர் பகுதிகளில் பரவி உள்ளது.