இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,000-ஐ தாண்டியது
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,000-ஐ தாண்டியது
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எனினும், கடந்த 4ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,000-ஐ தாண்டியது
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எனினும், கடந்த 4ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 134 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,415ல் இருந்து 2,549 ஆக உயர்வடைந்துள்ளது. 26 ஆயிரத்து 234 பேர் குணமடைந்தும், 49 ஆயிரத்து 219 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்து 281ல் இருந்து 78 ஆயிரத்து 3 ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 25,922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 975 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5547 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 9267 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 566 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3562 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் கடந்த 4 நாட்களாக 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 9227 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2176 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநில வாரியாக விவரம்:
அசாமில் 80 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
பீகாரில் 940 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 388 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 187 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 28 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 55 பேர் குணமடைந்தது.
கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 7998 பேருக்கு பாதிப்பு; 106 பேர் பலி; 2858 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 793 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 418 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 155 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 16 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 534 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 490 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 4328 பேருக்கு பாதிப்பு; 121 பேர் பலி; 2459 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 173 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 79 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 538 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 143 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1924 பேருக்கு பாதிப்பு; 32 பேர் பலி; 200 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 72 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 46 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 959 பேருக்கு பாதிப்பு; 33 பேர் பலி; 451 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 971 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 466 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1367 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 940 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2290 பேருக்கு பாதிப்பு; 207 பேர் பலி; 702 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 2137 பேருக்கு பாதிப்பு; 47 பேர் பலி; 1142 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 4173 பேருக்கு பாதிப்பு; 232 பேர் பலி; 2004 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 3729 பேருக்கு பாதிப்பு; 83 பேர் பலி; 1902 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 66 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.