இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்வு
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்வுஇந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எனினும், கடந்த 4ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்து 401 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை 832ல் இருந்து 868 ஆக உயர்ந்து உள்ளது. 4 ஆயிரத்து 786 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர்.
கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று இல்லாத நிலையில் கோவா நீடித்து வருகிறது.
இதனை தொடர்ந்து மணிப்பூர் (2 பேர்), அருணாசல பிரதேசம் (ஒருவர்), அந்தமான் நிகோபார் தீவுகள் (33 பேர்) மற்றும் மிசோரம் (ஒருவர்) ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு முழு அளவில் விடுபட்டு உள்ளன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,500-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3604 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 2,293 பேர் உயிரிழந்த நிலையில், 22,455 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநில வாரியாக விவரம்:
அசாமில் 65 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.
பீகாரில் 747 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 377 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 174 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 24 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 53 பேர் குணமடைந்தது.
கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 7233 பேருக்கு பாதிப்பு; 73 பேர் பலி; 2129 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 730 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 337 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 152 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 519 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 489 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 3988 பேருக்கு பாதிப்பு; 113 பேர் பலி; 2264 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 160 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 78 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 42 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 414 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 85 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 12 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1877 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 168 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 68 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 46 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 862 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 426 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 879 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 427 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1275 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 800 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2063 பேருக்கு பாதிப்பு; 190 பேர் பலி; 499 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 2018 பேருக்கு பாதிப்பு; 45 பேர் பலி; 975 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3785 பேருக்கு பாதிப்பு; 221 பேர் பலி; 1747 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 3573 பேருக்கு பாதிப்பு; 80 பேர் பலி; 1758 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 59 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.