Matrimony OTT-Platforms Jobs Coupons Business

சென்னை முழுவதும் கொரோனா பரவியது எப்படி? தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
சென்னை முழுவதும் கொரோனா பரவியது எப்படி?
சென்னையின் ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களிலேயே அதிக கொரோனா பாதிப்புகள் இருந்து வந்த நிலையில் தற்போது கோடம்பாக்கம் மண்டலத்தில் தான் அதிக பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி சென்னையில் மொத்தம் 2,644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  461 பாதிப்புகள் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ளன. அதாவது சென்னையின் 17.4% பாதிப்புகள் இந்த மண்டலத்தில் பதிவாகியுள்ளன.
கோடம்பாக்கம் மண்டலத்தில் தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், கோடம்பாக்கம் என தென் சென்னையின் முக்கிய பகுதிகளை சேர்ந்த 16 வார்டுகள் உள்ளன. கோயம்பேடு மார்க்கெட் மூலம் தொற்று பரவ தொடங்கியது தான் இந்த மண்டலத்தில் பாதிப்புகள் அதிகமானதற்கு காரணம். கோடம்பாக்கம் கடந்த வாரம் வரை ஒரு நாளுக்கு சராசரியாக 20 முதல் 30 பதிப்புகள் தினசரி பதிவாகி வந்த நிலையில் கோயம்பேட்டில் தொற்று பரவல் தொடங்கிய பிறகு, ஒரு நாளுக்கு 50 முதல் 60 பாதிப்புகள் உறுதியாகின்றன. கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் பலர் இந்த மண்டலத்தில் வசிக்கின்றனர். மேலும் அவர்களின் மூலம் வசிப்பிடங்களில் பலருக்கு பரவியுள்ளது.

அண்ணா நகர், அம்பத்தூரிலும் பாதிப்பு
கோயம்பேடு பகுதியை ஒட்டியுள்ள அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களிலும் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம்.
மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது.  அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.  எனினும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என சுட்டி காட்டியுள்ளது.

தொற்றே இல்லாத மண்டலமாக ஆரம்பத்தில் இருந்த வந்த அம்பத்தூர் மண்டலத்தில் மே 3ம் தேதி 42 பாதிப்புகள் உறுதியாகின. அடுத்து ஐந்து நாட்களில் 100 பாதிப்புகள் அதிகமாகி தற்போது 142 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த மண்டலத்தில் கோயம்பேட்டுக்கு அருகில் உள்ள முகப்பேர் பாடிகுப்பம் பகுதிகளில் தான் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அண்ணா நகரில் மே 3-ம் தேதி 85 பேர் மட்டுமே மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வந்தார்கள். தற்போது 168 பேர் சிகிச்சையில் உள்ளனர்..வட சென்னை பகுதிகளில் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் மக்கள் ஒரு சதுர கி.மீக்கு வசிக்கிறார்கள். இவ்வளவு நெருக்கமான இடத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பது என்பது சவாலான விசயமே. வட சென்னையில் உள்ள திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் தொற்று அதிகமானதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதுதான் அடிப்படையான காரணம்.

வளசரவாக்கத்தில் மே3 77 பாதிப்புகள் மட்டுமே இருந்தன. தற்போது 205 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டுக்கு அருகில் இருக்கும் 144, 145, 148 வார்டுகளை சென்னை மாநகராட்சி கவனத்துடன் கையாள்கிறது.

திருவிகநகர் - வார்டு 77
சென்னையில் வார்டு 77 என்று கூறினால் தனியாக தெரியும் அளவு பாதிப்புகளை அதிகம் கொண்ட வார்டாக இது இருக்கிறது. திருவிகநகர் மண்டலம் புளியந்தோப்பு பகுதியில் உள்ள இந்த வார்டில் மட்டும் 223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் உள்ள பாதிப்பை விட இது அதிகமாகும். மக்கள் தொகை அடர்த்தி, நெருக்கமான வீடுகள் அதிகமுள்ள வார்டு 77 ல் கடந்த வாரத்தில் இரண்டு துப்புரவு பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

குணமடைந்தவர்கள்
அவர்கள் அப்பகுதியில் நடைபெற்ற பிராத்தனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதுவே தொற்று பரவலுக்கு காரணமாகியுள்ளது. புளியந்தோப்பை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் சுமார் 500 துப்புரவு பணியாளர்களின் வசிப்பிடமாகவும் இந்த வார்டு உள்ளது. கொரோனா களப்பணியாளர்களை அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தால் இந்த தொற்று பரவலை தடுத்திருக்க முடியும். இந்த வார்டு மட்டுமல்லாமல் அருகில் உள்ள வார்டு 78- சூளை பகுதியிலும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் பதிப்புகள் அதிகம் உள்ளன.

இந்த வார்டுகள் காரணமாகவே திருவிக நகர் மண்டலத்தில் பாதிப்புகள் அதிகமாகி, ராயபுரம் மண்டலத்தை பின்னுக்கு தள்ளி சென்னை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது வரை இந்த மண்டலத்தில்  448 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ராயபுரம்
சென்னையில் அதிக பாதிப்புகளைக் கொண்ட மூன்றாவது  மண்டலம் ராயபுரம். முதலில் டெல்லி சென்று திரும்பியவர்களால் பாதிப்புகள் அதிகமாகின. பின் அப்பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் சுமார் 30 ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டு அவர்களின் தொடர்புகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த மண்டலத்தில் பாதிப்புகள் அதிகமாகியுள்ளன. தற்போது வரை இந்த மண்டலத்தில் 422 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த மண்டலத்தில் ஆரம்பத்திலிருந்தே பாதிப்புகள் அதிகமாக இருந்ததால் 14 முதல் 21 நாட்கள் சிகிச்சைப் பெற்று குணமடைந்த்வர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. 422 பேரில் 101 பேர் இது வரை வீடு திரும்பியுள்ளனர்.

தேனாம்பேட்டை மண்டலத்தில் தன்னார்வலர் ஒருவர் மூலமாக திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் மட்டும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வார்டு 120ல் பாதிப்புகள் அதிகமாவதற்கு இது முக்கிய காரணம். தேனாம்பேட்டையில் மே 3ம் தேதி 121 பேர் மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார்கள். ஐந்து நாட்களில் அந்த எண்ணிக்கை இருமடங்குக்கும் மேலாகி 274 ஆக உள்ளது.

ஒரு நாளுக்கு ஒன்றிரண்டு பாதிப்புகள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு வந்த அடையாறு மண்டலம் தற்போது 100 எண்ணிக்கையை தாண்டியுள்ளது. திருவான்மியூர் மார்க்கெட்டில் தொற்று ஏற்பட்டதன் காரணமாக இங்கு பதிப்புகள் அதிகமாகி வருகின்றன.

மாதவரத்தில் மே 3ம் தேதி வெறும் 5 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பால் பண்ணை ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக தற்போது 30 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வயது வாரியாக பார்க்கையில்
ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, ஆகிய மண்டலங்களில் ஆரம்பம் முதலே குறைவான பாதிப்புகளே உள்ளன. பாதிப்பே இல்லாமல் இருந்த மணலியில் தற்போது 14 பாதிப்புகள் உள்ளன. சென்னையில் குறைவான பாதிப்புகளை கொண்ட இந்த நான்கு மண்டலங்களில் மொத்தமாக 67 பாதிப்புகள் உள்ளன. மேலும் திருவெற்றியூர் மண்டலத்தில் 43 பாதிப்புகள் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 399 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 43 பேருக்கு இதுவரை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 18 மாவட்டங்களில் புதிதாக 600 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 28 குழந்தைகளும் உள்ளனர். மேலும் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 405 ஆண்கள், 195 பெண்கள் என 600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 1,605 பேர் இதுவரை குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். நேற்று 31 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று 28 குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 25 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 600 பேரில், சென்னையில் 1½ வயது பெண் குழந்தை உட்பட 23 குழந்தைகள் மற்றும் 376 பேரும், திருவள்ளூரில் 4 வயது குழந்தை உட்பட 2 குழந்தைகள் மற்றும் 73 பேரும், கடலூரில் 5 வயது ஆண் குழந்தை உட்பட 2 குழந்தைகள் மற்றும் 34 பேரும், செங்கல்பட்டில் 26 பேரும், விழுப்புரத்தில் 21 பேரும், திருவண்ணாமலையில் 11 பேரும், காஞ்சீபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா 8 பேரும், விருதுநகரில் 3 பேரும், நெல்லையில் 4 பேரும், கிருஷ்ணகிரி, மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திருச்சி, திருப்பத்தூர், தேனி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 78 வயது மற்றும் 58 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைப்போல் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 83 வயது முதியவரும் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad