தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் மேலும் 526 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் 526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 2799 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3330 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மொத்த உயிரிழப்பு 44 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 219 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1824 ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் கொரோனா நோய்க்கிருமி பரவுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. நோய்த்தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பச்சிளம் குழந்தைகளும், சிறுவர்களும் இந்த நோய் தொற்றுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிகளும், முதியவர்களும் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றால் தமிழகத்தில் சமூக பரவல் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,535- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,342-லிருந்து 59,662-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,886-லிருந்து 1,981-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,540-லிருந்து 17,847-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,824 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 219 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது.
* தமிழகத்தில் இதுவரை 2,29,670 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 13,254 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 52 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 4,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4,495 ஆண்கள், 2,038 பெண்கள், 2 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.
* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
* பாதுகாப்பு வளையத்திற்குள் தான் தமிழகம் உள்ளது.
* கொரோனாவால் இன்று 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 279 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* சென்னை கோயம்பேடு சந்தையின் மூலம் 1,867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* விழுப்புரத்தில் 67, செங்கல்பட்டில் 40, பெரம்பலூரில் 31, திருவள்ளூரில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 219 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 219 பேர் மீண்ட நிலையில் இதுவரை 1,824 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது.