உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியது; மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை டிரம்ப் எடுத்துக் கொள்வதால் உயிருக்கு ஆபத்து - நான்சி பெலோசி

 உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியது
கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பிடியில் அமெரிக்க வல்லரசு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. என்னதான் ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அந்த நாடு தொடர்ந்து கொரோனாவின் பிடியில்தான் இருந்து வருகிறது
.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.24 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 324,535 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,982,875 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,956,361 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,443 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101,139 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,163 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 39,174 பேர் குணமடைந்தனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 93,533 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,570,583ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 32,169 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226,699 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,778 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 278,803 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,837 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 299,941 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,022 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180,809 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,341 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 248,818 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,119 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124,603 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,108 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,791 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,193 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177,827 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,715 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,249 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 82,960 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,954 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 4,199 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,891 பேரும், பிரேசில் நாட்டில் 17,983 பேரும், சுவீடன் நாட்டில் 3,743 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,912 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,561 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,332 ஆக அதிகரித்துள்ளது.

* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,247 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை டிரம்ப் எடுத்துக் கொள்வதால் உயிருக்கு ஆபத்து - நான்சி பெலோசி
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,533- ஆக உயர்ந்துள்ளது.  அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  1,570,583- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை எடுத்து வருவதாக டிரம்ப் வெளியிட்ட தகவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் எதிரியாக கருதப்படும் சபாநாயகர் நான்சி பெலோசி கடுமையாக விமர்சித்துள்ளார்.ஏற்கனவே பருத்த உடலமைப்பை கொண்ட டொனால்டு டிரம்ப் தற்போது அந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் அவர் உயிருக்கு ஆபத்து  ஏற்படலாம் என நான்சி கவலை தெரிவித்துள்ளார்.

சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அவர் நமது ஜனாதிபதி, விஞ்ஞானிகளால் இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தை தற்காப்புக்காக அவர் எடுக்க மாட்டார் என்று நான் விரும்புகிறேன் என்றார். குறிப்பாக அவரது வயதுடையவர்கள், அதுவும் பருத்த உடல் அமைப்பை கொண்ட அவர் குறித்த மருந்தை உட்கொள்வது ஒரு நல்ல யோசனை அல்ல என்று நான் நினைக்கிறேன் என்றார்.

2019 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட மருத்துவக் குறிப்பில், ஜனாதிபதி டிரம்ப் உடல் பருமன் அதிகம் கொண்டவர் எனவும் ஆனால் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.இந்த மருத்துவக்குறிப்பை சுட்டிக்காட்டியே சபாநாயகர் நான்சி பெலோசி தற்போது டொனால்டு டிரம்பை விமர்சித்துள்ளார்.

மட்டுமின்றி ஜனாதிபதியின் கூற்றுக்குப் பின்னர் அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவர்கள் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad