சென்னையில் அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா; சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
சென்னையில் அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  தமிழகத்தில் 3,023 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  1,379 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  30 பேர் பலியாகி உள்ளனர்.  சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது.  உணவு விடுதிகள், ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், அம்மா உணவகத்தில் பலர் சாப்பிட்டு வந்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இவரது வீடு இருப்பதால் நோய்த்தொற்று பரவி இருக்கலாம் எனத் தகவல் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் உடனடியாக அவர் அனுமதிக்கப்பட்டார்.  தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இவரது வீடு இருப்பதால்  நோய்த்தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

அவருடன் தொடர்புடைய பலரையும் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதனை தொடர்ந்து திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதி அம்மா உணவகம் மூடப்பட்டது.  இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் ஏழை, எளியோர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  தமிழகத்தில் 3,023 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  1,379 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  30 பேர் பலியாகி உள்ளனர்.  சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது.  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றில் இருந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது. மேலும் துப்புரவு தொழிலாளர் உட்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, துப்புரவு தொழிலாளர் உட்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad