சர்ச்சை விளம்பரம்: சென்னையில் பேக்கரி உரிமையாளர் கைது; சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கோவில் பூசாரி கைது

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

சர்ச்சை விளம்பரம்: சென்னையில் பேக்கரி உரிமையாளர் கைது
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் பிற மதம் பற்றி இழிவாக பேசுதல்  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்தனர்

ஜெயின் சமூகத்தினரால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் என்றும், முஸ்லீம் பணியாளர்கள் இல்லை என்றும் விளம்பரம் செய்த பேக்கரி கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, தி.நகர், மகாலட்சுமி தெருவில் வசிக்கும் பிரசாந்த் அதே முகவரியில் Jain Bakeries & Confectioneries என்ற பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார். ஆன்லைனில் பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், பிரசாந்த் அவருடைய வாட்சப் குரூப்பில் பேக்கரி குறித்து விளம்பரம் செய்தபோது, அதில் ‘‘Made By Jains On Orders, No Muslim Staffs’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விளம்பரத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி தவறாக குறிப்பிட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

சமூக வலைதளங்கள் வாயிலாக புகார்கள் சென்ற நிலையில், இது தொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் பிற மதம் பற்றி இழிவாக பேசுதல்  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முஸ்லீம் மக்களால்  கொரோனா நோய் பரவி வருவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியாவதால், ஜெயின் மக்கள் பயத்தில் உள்ளனர். அதனால், தனது கடையில் பொருட்கள் யாரும் வாங்க வரவில்லை எனவும் இதனால்தான் இப்படி ஒரு விளம்பர அட்டையை தயாரித்ததாகவும் காவல்துறையினரிடம் அவர் கூறியுள்ளார்.மேலும், இது போன்று ஒரு நேரத்தில் ஜெயின் நமக்கள் நம்பிக்கைக்கு உகந்த ஒரு கடையாக தனது கடை இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு விளம்பரத்தை அட்டை தயாரித்ததாக விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை கடுமையாக எச்சரித்த போலீசார் காவல்நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பேசிய இளைஞர் அடித்துக் கொலை
பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பேசிய இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 7-ம் தேதி வீட்டில் இருந்த சிறுமியிடம் பேசிய இளைஞரை சிறுமியின் குடும்பத்தினர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுமி குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்ததை அடுத்து தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கோவில் பூசாரி கைது
ஆரணி அருகே 4 வயது குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் பூசாரியை ஆரணி கிராமிய போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்த சுகுமார் (70). இவர் ஆரணியை அடுத்த ஒதலவாடி கிராமத்தில் உள்ள கடந்த 25 ஆண்டுகளாக ஜெயினர் ஆலயத்தில் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றார்.

மேலும், அதே கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி ஒருவரின் 4 வயது குழந்தை, பூசாரியின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. பின்னர், வீட்டுக்கு திரும்பிய குழந்தை, பூசாரி சாக்லேட் கொடுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், குழந்தையை தச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது, குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.

மேலும், இது சம்மந்தமாக ஆரணி கிராமிய காவல்நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, கோவில் பூசாரி சுகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 வயது பெண் குழந்தைக்கு 70 வயது முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அம்மா அப்பா பத்திரம்: சகோதரருக்கு தகவல் அனுப்பி கடலில் விழுந்து தற்கொலை செய்த மருத்துவர்
சென்னையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் மெரினா கடல் பகுதியில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். கொண்டிருக்கிறார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை 7 மணி அளவில் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடல் சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரே கரை ஒதுங்கியது. வழக்குப் பதிவு செய்த மெரினா காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்தவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மல்லிகா அர்ஜூன் (35) என்பதும் அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் என்பதும் தெரியவந்தது.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் இவரது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் இவர் கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தனது காரில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து கலங்கரை விளக்கம் அருகே காரை நிறுத்திவிட்டு இவர் கடலுக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இறப்பதற்கு முன் மெரினாவில் காரை நிறுத்திவிட்டு தனது சகோதரருக்கு வாட்ஸ்அப்பில் கார் லொகேஷனை அனுப்பிவிட்டு, எனது இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல, அப்பா அம்மாவை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும் என மெசேஜ் செய்துள்ளார் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் மருத்துவரின் குடும்பத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad