உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46.24 லட்சத்தை தாண்டியது; மறைக்கப்பட்ட உண்மை: சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்சத்திற்கு மேல்- அதிர்ச்சி தகவல்

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46.24 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 308,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,624,034 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,757,128 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,008  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,649 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 27,920 பேர் குணமடைந்தனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,599 ஆக அதிகரித்துள்ளது.
* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 88,507 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,484,285 ஆக அதிகரித்துள்ளது.
* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,610 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223,885 ஆக உயர்ந்துள்ளது.
* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,459 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 274,367 ஆக அதிகரித்துள்ளது.
* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,418 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 262,843 ஆக அதிகரித்துள்ளது.
* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,529 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179,506 ஆக அதிகரித்துள்ளது.
* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33,998 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236,711 ஆக உயர்ந்துள்ளது.
* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,902 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116,635 ஆக அதிகரித்துள்ளது.
* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,959 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,644 ஆக அதிகரித்துள்ளது.
* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,001 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175,699 ஆக அதிகரித்துள்ளது.
* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,643 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,681 ஆக அதிகரித்துள்ளது.
* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,933  ஆக அதிகரித்துள்ளது.
* துருக்கியில் 4,055 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,878 பேரும், பிரேசில் நாட்டில் 14,817 பேரும், சுவீடன் நாட்டில் 3,646 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,562 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,518 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,767 ஆக அதிகரித்துள்ளது.
* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,190 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

மறைக்கப்பட்ட உண்மை: சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்சத்திற்கு மேல்- அதிர்ச்சி தகவல்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. அங்கு வேகமாக பரவியதால், அந்த நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. அங்கு கொரோனா தாக்கி ஏராளமானோர் பலி ஆனார்கள்.

என்றாலும் சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த நாட்டில் 81 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,310-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 84,029 என்றும் பலி எண்ணிக்கை 4673 என அதிகாரப்பூர்வ கணக்குகள் வெளியிட்டது.

சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா சீனாவை விட அமெரிக்கா, பிரான்ஸ்,இத்தாலி, ஸ்பெயின்,  நாடுகளில் அதிக உயிச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் தான் உலகிலேயே அதிக பாதிப்பும் , இறப்பு எண்ணிக்கையும் பதிவாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்று ஏற்கனவே அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தங்கள் நாட்டில் நிகழ்ந்த கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த உண்மையான தகவல்களை மூடி மறைப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.  அமெரிக்க குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் பென் செஸ்சே, மைக்கேல் மெக்கால் ஆகியோர், புலனாய்வு துறையின் அறிக்கையை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 640,000 என தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் பதிவு செய்துள்ளது. இதுவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த புள்ளிவிவரங்கள் தற்போது கசிந்துள்ள நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.

இருப்பினும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக பலர் நம்புகிறார்கள்.இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் வாயிலாக கசிந்த ஒரு புள்ளிவிவரத்தில்  சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 640,000 என இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.சீனாவின் 230 நகரங்களில் சுமார் 100 தன்னார்வ பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad