தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் மேலும் 447 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. எனினும், தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் கட்டுக்குள் வந்தபாடில்லை.
குறிப்பாகக் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதைக் காண முடிகிறது. எனினும், இந்த எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம், விரைவில் கொரோனா கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த தகவலின் படி, தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,674- ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281-லிருந்து 78,003-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,415-லிருந்து 2,549-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,836-லிருந்து 26,235-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,240 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 64 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது.
* தமிழகத்தில் இன்று மொத்தம் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 58 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு
* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,965 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 447 பேருக்கு தொற்று உறுதியானது.
* சென்னை மிகவும் நெருக்கமான மாநகரம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 363 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* புதிதாக வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு திரும்பியவர்களில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.68 ஆகவே உள்ளது.
* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கண்டு அச்சப்பட வேண்டாம் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
* தமிழகத்திற்கு வரும் ரயில் பயணிகளை கண்காணிக்க 400 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* கப்பலில் வருவோர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
* 23 நாட்களாக பாதிப்பு இல்லாத சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் விகிதம் மிகக்குறைவாக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 64 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 64 பேர் மீண்ட நிலையில் இதுவரை 2,240 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது.