காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா; தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையை சேந்தவர்கள் என்றும், கோயம்பேடு சந்தையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தொடர்புடையதாக 647 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும், அதில் 520 முடிவுகள் வந்ததாகவும் அதில் இன்று மட்டும் 43 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி; இதில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், மீதமுள்ள 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
இன்று மட்டும் 43 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் காஞ்சிபுரத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85-ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினார். மேலும் இன்று பாதிப்புக்குள்ளான 43 பேருடன் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியிலும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சுகாதாரத்துறையும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மதுபானங்களை ஆன்லைனில் விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.