இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்வு; வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பாகும் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும்- சோனியா காந்தி
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-லிருந்து 42,533-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,306-லிருந்து 1,373-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,887-லிருந்து 11,707-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,301 ஆக நேற்று உயர்வடைந்து இருந்தது. 10 ஆயிரத்து 633 பேர் குணமடைந்தும், 28,046 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 980 ஆக உயர்வடைந்தது.
இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 72 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,301ல் இருந்து 1,373 ஆக உயர்வடைந்து உள்ளது. 11 ஆயிரத்து 706 பேர் குணமடைந்தும், 29,453 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 980ல் இருந்து 42 ஆயிரத்து 533 ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இரண்டாயிரத்து 487 பேருக்கு கொரோனா தொறறும், 83 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவாக கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் உயிரிழப்பு 500ஐ கடந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரமாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குஜராத்தில் ஐந்தாயிரத்தையும், டெல்லியில் நான்காயிரத்தையும் கடந்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ள நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களின் பாதிப்பு மூவாயிரத்தை நெருங்கியுள்ளது. இதேபோல் மேற்கு வங்க மாநில பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பாகும் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும்- சோனியா காந்தி
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக ரயில்வே 6 சிறப்பு ரயில்களை அறிவித்தது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் கடந்த 1-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐதராபாத் - ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாலை 4.50 மணிக்கு 1200 வெளிமாநில தொழிலாளர்களுடன் முதல் ரயில் புறப்பட்டு சென்றது.
இதேபோல் மகாராஷ்டிராவின் நாசிக் - உபியின் லக்னோவுக்கு இரவு 9.30 மணிக்கு மற்றொரு ரயில் புறப்பட்டு சென்றது. கேரளாவின் அலுவா - ஒடிசாவின் புவனேஸ்வருக்கு மாலை 6மணிக்கும், நாசிக் - மத்தியப் பிரதேசத்தின் போபாலுக்கு இரவு 8 மணிக்கும், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் - பீகாரின் பாட்னாவுக்கு இரவு 10 மணிக்கும், ராஜஸ்தானின் கோட்டா - ஜார்க்கண்டின் ஹாதியாவுக்கு இரவு 9 மணிக்கு ஒரு ரயில் என 5 ரயில்கள் புறப்பட்டு சென்றன. இந்த ரயில்கள் புறப்பட்ட இடம் மற்றும் சேரவேண்டிய இடம் என 2 இடங்களில் மட்டுமே நிற்கும். சமூக இடைவெளியை பின்பற்றி 1000 முதல் 1200 பயணிகளே இந்த ரயிலில் பயணம் செய்தனர்.
ராஜஸ்தானின் கோட்டா மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு தலா ஒரு ரயில்கள் புறப்பட்டு ஜார்க்கண்டுக்கு சென்றன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அடையாள அட்டையுடன் தகுந்த பயணச்சீட்டுடன் வந்தவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லாத பட்சத்தில் தான் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். இவர்களுக்கான உணவு மற்றும் குடிநீரை அனுப்பிவைக்கும் மாநில அரசு செய்து தந்திருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்
இது குறித்து சோனியாகாந்தி எழுதி உள்ள கடிதத்தில் நாடு தழுவிய ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயண செலவை காங்கிரஸ் செலுத்துவதாக கூறி உள்ளார்.
சோனியா காந்தி எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
நாடு தழுவிய ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயண செலவை காங்கிரஸ் ஏற்கும்
இது எங்கள் தேசிய வீரர்களின் சேவையில் இந்திய தேசிய காங்கிரஸின் சிறிய பங்களிப்பாகவும், அவர்களுக்காக ஒற்றுமையுடன் தோளோடு தோள் நிற்கவும் காங்கிரஸ் நிர்வாகிகளை காங்கிரஸ் தலைவர் கேட்டு கொண்டார்
மேலும் கடிதத்தில் நமது தொழிலாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியின் தூதர்களாக உள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமான பயணத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் நமது அரசாங்கம் போக்குவரத்து மற்றும் உணவு போன்றவற்றுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ .100 கோடியை செலவு செய்கிறது.
குஜராத்தில் ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக, ரயில் அமைச்சகம் பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்கிறது. அப்படியானால், நமது நாட்டின் தொழிலாளர்களுக்கு குறிப்பாக இலவச ரயில் பயணத்தை, இந்த நேரத்தில் கடுமையான துயரத்தில் ஏன் கொடுக்க முடியாது?
ஊரடங்கு குறித்து மத்திய அரசு முன் அறிவிப்பு நோட்டீஸ் அறிவிப்பைக் கொடுக்கவில்லை, எனவே தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இன்றும் கூட, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் "நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விரும்புகின்றனர், ஆனால் பணம் அல்லது இலவச போக்குவரத்து இல்லை
குறிப்பாக கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த நெருக்கடி நேரத்தில் மத்திய அரசும் ரயில் அமைச்சும் ரயில் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.
காங்கிரஸின் தொடர்ச்சியான கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணிக்க மத்திய அரசு, ரயில்வே அமைச்சும் முடிவு செய்துள்ளது.
எனவே, இந்திய தேசிய காங்கிரஸ், ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும் ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்க வேண்டும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று சோனியா காந்தி அதில் கூறி உள்ளார்.