Matrimony OTT-Platforms Jobs Coupons Business

உலக கொரோனா பாதிப்பு 41 லட்சத்தை தாண்டியது; ஏர் இந்தியா விமானம் மூலம் VandeBharatMission இன் கீழ் இந்தியர்களை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

உலக கொரோனா பாதிப்பு 41 லட்சத்தை தாண்டியது

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.  இது நேற்றிரவு 9 மணிவரையில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 224 ஆக இருந்தது.

இதேபோன்று உலக அளவிலான பலி எண்ணிக்கையும் 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.  அமெரிக்கா மற்ற நாடுகளை விட அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.  அந்நாட்டில், 78 ஆயிரத்து 600 பேர் பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 31 ஆயிரத்து 662 மற்றும் 30 ஆயிரத்து 395 ஆக பலி எண்ணிக்கையை கொண்டுள்ளன.

உலக அளவில் 13 லட்சத்து 63 ஆயிரத்து 698 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இது அமெரிக்காவில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 534 ஆக உள்ளது.உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.40 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 280,431 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 4,100,599 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,439,842 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 47,685 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,886 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 16,540 பேர் குணமடைந்தனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,604 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 80,037 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,347,309 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,395 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 218,268 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,478 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 262,783 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,310 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176,658 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,587 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215,260 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,589 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 106,220 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,581 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,596 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,549 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171,324ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,422 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,382 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,887 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 3,739 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,830 பேரும், பிரேசில் நாட்டில் 10,656 பேரும், சுவீடன் நாட்டில் 3,220 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,693 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,446 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,353 ஆக அதிகரித்துள்ளது.

* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,126 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

ஏர் இந்தியா விமானம் மூலம் VandeBharatMission இன் கீழ் இந்தியர்களை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து திருப்பி அனுப்ப முடிவு: அமெரிக்காவின் இந்திய தூதர்
முதல் விமானம் சிறிது நேரத்தில் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படும் என அமெரிக்காவின் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து கூறினார். பின்னர் 4 வெவ்வேறு மையங்களில் இருந்து 7 விமானங்களை இயக்கப் போகிறோம் எனவும் கூறினார். ஏர் இந்தியா விமானம் மூலம் அனைவரையும் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்த விமானங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் செல்கின்றன எனவும் கூறினார்.

சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள இந்தியர்கள் அனைவரும் VandeBharatMission இன் கீழ் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவித்தார். கொரேனாவால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் இருப்பவர்கள் உஸ்பெகிஸ்தானில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்படுவார்கள் என தாஷ்கண்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சந்தோஷ் ஜா கூறினார். மேலும் அவர்கள் அனைவருக்கும் வெப்பநிலை சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் வெப்பநிலை சரியாக இருந்தால் மட்டும் அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும், இல்லையெனில் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சோதனைக்காக உட்கொள்ளப்படுவார்கள் எனவும் கூறினார். இந்நிலையில் முதல் வாரத்தில் மொத்தம் 25,000 பேர் பதிவு செய்துள்ளனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். நாங்கள் 7 விமானங்களில் பயணிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம் என கூறினார். மேலும் இது ஒரு தொடர்ச்சியான பணியாக இருக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் தேவை மற்றும் மக்கள் இந்தியாவில் எங்கு செல்ல விரும்புகிறார்கள், மற்றும் உள்ளூர் நிலைமை என்ன அனுமதிக்கிறது என்பதைப் பொறுத்து அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து ட்விட்டரில் தெரிவித்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad