Matrimony OTT-Platforms Jobs Coupons Business

நாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்; ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்: பிரதமர் மோடி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

நாடு முழுவதும் 4-வது ஊரடங்கு குறித்து மே 18-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்; ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும்: பிரதமர் மோடி
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கொரோனா தொற்றுக்கு எதிராக 4 மாதங்களாக போராடி வருகிறோம்.

* உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது.

* கொரோனா வைரஸ் உலக நாடுகளை மண்டியிட வைத்துள்ளது.

* இந்திய ஒரு சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்று விடக்கூடாது.

* கொரோனா வைரஸுக்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது. நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.

* மனித இனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்பு.

* கொரோனா வைரஸ் முன்னதாக நம் மனித இனம் தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

* கொரோனா பாதிப்பால் இந்தியா ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. தற்போதைய நெருக்கடி இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது.

* உலகம் ஒரே குடும்பம் என்பதை இந்திய கலாச்சாரம் வலியுறுத்தி வருகிறது.

* கொரோனா பாதிப்பின்  தொடக்கத்தில் தடுப்பு உபகரணங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை.

* மிக குறைந்த அளவிலான என் 95 முக கவசங்களே இந்தியாவில் இருந்தன. தற்போது 2 லட்சம் கொரோனா தடுப்பு உபகரணங்கள், 2 லட்சம் என் 95 முக கவசங்கள் நாள்தோறும் தயாரிக்கப்படுகின்றன.

* யோகாசனம் இந்தியா உலகிற்கு அளித்த பரிசு ஆகும்.

* கொரோனா விவகாரத்தில் உலகிற்கே இந்தியா ஒரு நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது.

* 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை பிரதமர் மோடி அறிவிக்கிறார். இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார். சிறு,குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும்.

* கொரோனாவிற்கு பின்னர் இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

* துணிச்சலான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயாராகிறது.

* உள்நாட்டு சந்தையின் முக்கியத்துவத்தை கொரோனா பிரச்னை உணர்த்தியுள்ளது.

* அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* கைத்தறியையும் நாம் இந்த சமயத்தில் பிரபலபடுத்தவேண்டும். ஏற்றுமதியை வேகப்படுத்தவேண்டிய நேரமிது.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான 4-ம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்.

* 4-ம் கட்ட ஊரடங்கு குறித்த விவரங்கள் மே 18-ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad