உலக நாடுகள் நிலவரம்: பாதிப்பு 37.24 லட்சத்தை தாண்டியது; கொரோனாவில் இருந்து மீண்டவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய சீனா - தடுப்பூசி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
உலக நாடுகள் நிலவரம்:பாதிப்பு 37.24 லட்சத்தை தாண்டியது 
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 258,012 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,724,350 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,239,908 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 49,256 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,711 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,583 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 13,161 பேர் குணமடைந்தனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,485 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 72,256 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,237,466 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,315 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213,013 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 25,613 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250,561 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 25,531 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170,551 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,427 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 194,990 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,340 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,970 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,016 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,509 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,993 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167,007 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,168 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,087 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,881 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 3,520 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,795 பேரும், பிரேசில் நாட்டில் 7,921 பேரும், சுவீடன் நாட்டில் 2,854 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,043 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,339 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,271 ஆக அதிகரித்துள்ளது.

* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,074 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய சீனா - தடுப்பூசி
சீனாவின் உகான் நகரில் தோன்றியதாக கருதப்படுகிற கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது ஒன்றேதான் இந்த வைரசை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரே தீர்வாக அமையும்.

எனவேதான் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இது தொடர்பான ஆராய்ச்சிகள் பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கி சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து முழுமையாக மீண்டவர்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் 14 பேர் பயன்படுத்தப்பட்டனர். இவர்களில் 6 பேர் ஆரோக்கியமான சுகாதார நன்கொடையாளர்கள் ஆவர். 8 பேர் புதிதாக ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டவர்கள்.

14 பேரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு அவற்றின்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடப்பட்டுள்ளது.

சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தி உள்ளனர். 14 பேரின் நோய் எதிர்ப்பு சக்திகள் ஆய்வில் கண்காணிக்கப்பட்டன.

இந்த ஆராய்ச்சியின் முக்கிய முடிவு, கொரோனா வைரஸ் நோயாளிகள் உடலில் ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு பொருள்) உருவாகிறது. அத்துடன் ‘டி’ செல்களும் (டி உயிரணு) உருவாகின்றன. இவை சிறந்த தடுப்பூசியை வடிவமைப்பதற்கான முக்கிய தாக்கங்களாக அமைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதில் வைரசின் எந்த பகுதிகள் மிகவும் பயனுள்ளவை என்பதையும் இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. எனவே சாத்தியமான தடுப்பூசிகளுக்கு அவை குறிவைக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

அதே நேரத்தில் மனிதர்களில் சார்ஸ்-கோவ்-2-க்கான ஆன்டிபாடிகளை கண்டறிய பயன்படுத்தப்படும் ஆய்வக சோதனைகள், அவற்றின் துல்லியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை தீர்மானிக்க இன்னும் அதிகளவிலான சரிபார்ப்பு தேவை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி முடிவு, பி மற்றும் டி செல்கள், கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பாதுகாப்பில் பங்கேற்க பரிந்துரை செய்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் பகுப்பாய்வு செய்வதற்கும், அதன் பொறிமுறையை புரிந்துகொள்வதற்கும் எங்கள் பணி ஒரு அடிப்படையை வழங்கி இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கடுமையான நிகழ்வுகளில், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க ஒரு பயனுள்ள தடுப்பூசியை வடிவமைப்பதற்கான தாக்கங்களை இது கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர் சென் டோங் கூறி உள்ளார்.


இந்த ஆராய்ச்சி முடிவுகள், ‘ஜர்னல் ஆப் இம்யூனிட்டி’யில் (நோய் எதிர்ப்பு சக்தி இதழ்) வெளியாகி உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad