உலக நாடுகள் நிலவரம்: பாதிப்பு 35.63 லட்சத்தை தாண்டியது; கொரோனா விவகாரம்: சீனா உகான் நகரில் என்ன நடந்தது? - டிரம்ப்


தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
உலக நாடுகள் நிலவரம்: பாதிப்பு 35.63 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.48 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 248,137 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,563,359 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,153,847 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 50,864  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,306 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 10,887 பேர் குணமடைந்தனர்.
  * தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது.
* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 68,589 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,187,804 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,884 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 210,717 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 25,264 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 247,122 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 24,895 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168,693 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,446 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186,599 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,203 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,424 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,844 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,906 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,866 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165,664 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,056 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,571 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,877 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 3,397 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,762 பேரும், பிரேசில் நாட்டில் 7,025 பேரும், சுவீடன் நாட்டில் 2,679 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,682 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,303 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,061 ஆக அதிகரித்துள்ளது.

* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,043 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

கொரோனா விவகாரம்: சீனா உகான் நகரில் என்ன நடந்தது? - டிரம்ப்
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஒரு பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும் போது கூறியதாவது:-

கொரோனா விவகாரத்தில் சீனா உகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து  நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை வெளியிடுவோம். அது மிகவும் முடிவானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இது உலகளாவிய தொற்றுநோயாக மாறுவதற்கு முன்னர் சீனா இந்த நோயின் அளவு மற்றும் ஆபத்து குறித்து உலகை தவறாக வழிநடத்தியது என்பதில் தனக்கு சந்தேகம் இல்லை.

தனிப்பட்ட முறையில், அவர்கள் மிகவும் பயங்கரமான தவறு செய்ததாக நான் நினைக்கிறேன்.அவர்கள் அதை மறைக்க முயன்றனர் என கூறினார்

அதே சமயம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரடியாக விமர்சிக்க டிரம்ப் மறுத்துவிட்டார், அவரை ஒரு வலுவான தலைவர் என்று அழைத்தார்.நான் அவருடன் ஒரு நல்ல உறவைக் கொண்டுள்ளேன் என கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad