Matrimony OTT-Platforms Jobs Coupons Business

தமிழகத்தில் 34 வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி: என்னென்ன கடைகள் திறக்கலாம்? மதுரையில் 34 கடைகள் தவிர மேலும் சில கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

தமிழகத்தில் 34 வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி: என்னென்ன கடைகள் திறக்கலாம்?
தமிழக்தில் டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட 34 வகையான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24.03.2020 முதல் அமலில்
இருந்து வருகின்றது.

கடந்த 02.05.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறைஅமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், பெருநகர சென்னைகாவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிறமாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் (நோய்
கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) பல செயல்பாடுகள் / பணிகள், 11.05.2020 திங்கட்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுக்கப்பட்டுள்ளது.அதில் பிற தனிக்கடைகள் பிரிவில் கீழ்க்கண்ட கடைகள் திறக்கலாம்.

1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
2) பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
3) உணவகங்கள் (பார்சல் மட்டும்)
4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
6) சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
8) மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
9) கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
10) வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும்
வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
11) மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
12) கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
13) சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை)
14) சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக
பகுதிகளில் மட்டும்
15) மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
16) டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
17) பெட்டி கடைகள்
18) பர்னிச்சர் கடைகள்
19) சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20) உலர் சலவையகங்கள்
21) கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
22) லாரி புக்கிங் சர்வீஸ்
23) ஜெராக்ஸ் கடைகள்
24) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
25) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
26) நாட்டு மருந்து விற்பனை கடைகள்
27) விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
28) டைல்ஸ் கடைகள்
29) பெயிண்ட் கடைகள்
30) எலக்ட்ரிகல் கடைகள்
31) ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
32) நர்சரி கார்டன்கள்
33) மரக்கடைகள் மற்றும் பிளைவுட்  கடைகள்
34) மரம் அறுக்கும் கடைகள்

முடிதிருத்தும் நிலையங்கள், சலூன்கள், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்ககூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள்,
கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 34 கடைகள் தவிர மேலும் சில கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
மதுரையில் 34 கடைகள் தவிர மேலும் சில கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நோட்டு-புத்தக உற்பத்தி நிறுவனங்கள், பேப்பர் மொத்த வணிகம், எழுது பொருள் விற்பனை கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தக கடைகளை திறக்கவும் மாவட்ட ஆட்சியர் வினய் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். பாத்திரக்கடை, போட்டோ ஸ்டூடியோ, ஆழ்துளை கிணறு அமைக்கும் ஏஜென்சிகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad