மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
பொதுமுடக்கம் இன்று இரவுடன் முடிவடையும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறித்துள்ளது. நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 4வது கட்ட ஊரடங்குக்கான புதிய வழிமுறைகளை  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலம் வாரியாக வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தி இன்றோடு 54 நாட்கள் ஆன நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மே 31 ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியுடன் 3 ஆம் கட்ட பொதுமுடக்கம் முடியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே மே 31ந்தேதி வரை பொமுடக்கத்தை நீடித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது;

* இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு.

* உள்நாட்டு மருத்துவசேவை விமானங்கள் தவிர அனைத்து உள்நாட்டு, சர்வதேச விமான பயணங்களும் மே 31 வரை தடைசெய்யப்பட்டுள்ளன.

* மெட்ரோ ரயில் சேவைகள், பள்ளிகள், கல்லூரிகள் மே 31 வரை மூடப்பட்டு உள்ளன.

* ஹோட்டல், உணவகங்கள், சினிமா அரங்குகள், மால்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், தங்கும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்தும் இயங்காது.

* அனைத்து சமூக, அரசியல், மத செயல்பாடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

* கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வீட்டுக்கு வீடு ஆய்வு நடத்தப்படும்.

* பொது இடங்களில், பணியாற்றும் இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம்.

* பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம்.

* திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் சமூக இடைவெளி அவசியம். 50 நபர்களுக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

* மரணம் உள்ளிட்ட  துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி.

* பொது இடங்களில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கொரோனா நிலைமைப்படி சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களை மாநிலங்கள் தீர்மானித்து கொள்ளலாம்.

* இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.

* கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம். 5 பேருக்கு மேல் நிற்க அனுமதியில்லை.

* வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்.

* அலுவலகங்களில் வெப்ப சோதனை, கை கழுவுதல் அவசியம் செய்யவேண்டும்.

* அனைத்து விதமான சரக்கு வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, நாடு முழுவதும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்படும்.

* மாநில அரசுகள் அனுமதித்தால் சிவப்பு மணடலங்களில் சலூன்களை திறக்கலாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad