தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா; பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் வரும் 6ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா
சென்னையில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 1,458 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு 15 குழந்தைகள் உட்பட 266 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 37 பேர் முதன்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று திருநங்கை ஒருவருக்கும் கொரோனா நோய் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் திருநங்கைக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,015 ஆண்களும், 1007 பெண்களும், ஒரு திருநங்கையும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று 1,379 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 38 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு புதிதாக இல்லாமல் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எத்தனை பேர்? மாவட்டம் வாரியாக எண்ணிக்கை
* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 1,458 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 3,000ஐ தாண்டியது
*இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 266 பேருக்கு தொற்று உறுதி
* தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.

பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் வரும் 6ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு
தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் வரும் 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் தமிழகத்தில் இதுவரை 3023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1379 குணமடைந்துள்ள நிலையில் 30 உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு, பரவலை வைத்து மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஒரிரு நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டாலும், சேலம் சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் சேலம் மாவட்ட பாதிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து நோய் இல்லாத மாவட்டமாகவே இருந்து வருகிறது.
இதனையடுத்து பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் வரும் 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழக அரசு அறிவித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறையின் ஆணை 217க்கு உட்பட்டு தொழில் நிறுவனம் மற்றும் வணிக கடை இயங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிராபகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியை தொடர்ந்து தூத்துக்குடி, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்துள்ளதால் அந்த மாவட்டங்களும் தொற்று இல்லாத மாவட்டங்களாக உள்ளது.