பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா: அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
பரிசோதனை
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 11 பேரில், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீதமுள்ள 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து சொந்த ஊர் திரும்பியவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறதாம். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு திரும்பியவர்களை சுகாதாரத்துறையினர் போலீசார் உதவியுடன் கண்டறிந்து தனிமைப்படுத்தி, அவர்களின் சளி, ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களின் சளி, ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர்.
25 பேருக்கு கொரோனா
இதில் பெரம்பலூர், சில்லக்குடி, நன்னை, கொளத்தூர், இலுப்பைக்குடி, திம்மூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கும், கீழப்பெரபம்பலூர், அருணகிரிமங்கலம் ஆகிய பகுதியில் தலா 2 பேருக்கும், புதுவேட்டக்குடியில் 5 பேருக்கும், நல்லறிக்கையில் 7 பேருக்கும் என மொத்தம் 25 பேருக்கு பரிசோதனையின் முடிவில் கொரோனா வைரசின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) தமிழக சுகாதாரத்துறையினர் சார்பில் வெளியிடப்பபட்டுள்ளது.
கொரோனா பாதித்ததாக கூறப்படும் 25 பேர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதிகளில் சுகாதாரப்பணிகள், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழக வரைபடத்தில் ஆரஞ்சு மண்டலத்தில் இடம் பெற்றிருந்த பெரம்பலூர் மாவட்டம், தற்போது சிவப்பு மண்டலத்துக்குள் இடம் பெற போகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா: அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.பரிசோதனை