இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு கொரோனா; இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,06,750- ஆக உயர்ந்துள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு கொரோனா; இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,06,750- ஆக உயர்ந்துள்ளது
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 57-நாட்கள் ஆகியுள்ள போதிலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,06,750- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  3303 ஆக உயர்ந்துள்ளது.

ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 42,298- ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 5,611- பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல்,  140  பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

மராட்டியத்தில்  37,136 பேரும்,  தமிழகத்தில் 12,448 -பேரும்,  குஜராத்தில் 12,140- பேரும் , டெல்லியில் 10,554-பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1325 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 9639 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில்  12,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4895 பேர் குணமடைந்துள்ளனர்.  குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 12,140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 719 பேர்   உயிரிழந்துள்ள நிலையில், 5043 பேர் குணமடைந்துள்ளனர். 

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 142 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.
பீகாரில் 1498 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 534 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 200 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 57 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 101 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 59 பேர் குணமடைந்தது.

கோவாவில் 46 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 10554 பேருக்கு பாதிப்பு; 168 பேர் பலி; 4750 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 964 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 627 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 173 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 116 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 642 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 497 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 5845 பேருக்கு பாதிப்பு; 143 பேர் பலி; 3337 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 231 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 127 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 9 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 13 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 978 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 277 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 18 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 2002 பேருக்கு பாதிப்பு; 38 பேர் பலி; 1642 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 111 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 52 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 1397 பேருக்கு பாதிப்பு; 40 பேர் பலி; 544 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 1377 பேருக்கு பாதிப்பு; 17 பேர் பலி; 653 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1634 பேருக்கு பாதிப்பு; 38 பேர் பலி; 1010 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 2961 பேருக்கு பாதிப்பு; 250 பேர் பலி; 1074 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 4926 பேருக்கு பாதிப்பு; 123 பேர் பலி; 2918 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2532 பேருக்கு பாதிப்பு; 52 பேர் பலி; 1621 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 5465 பேருக்கு பாதிப்பு; 258 பேர் பலி; 2630 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 92 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 47 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad