கடலூரில் கொரோனா தொற்று உறுதி எண்ணிக்கை 228 ஆக உயர்வு; பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் இரண்டு மூதாட்டிகளுக்கு கொரோனா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கடலூரில் கொரோனா தொற்று உறுதி எண்ணிக்கை 228 ஆக உயர்வு
சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது.  இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  தமிழகத்தில் 31 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.  சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் கடந்த 1ந்தேதி 2 பேருக்கும், பின்னர் 2ந்தேதி 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.  இதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பின்படி, கடந்த 3ந்தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

இதனால் நகரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன.  ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடலூரில் இருந்து காய்கறிகளை விற்பனை செய்வதற்காக சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தைக்கு வந்து விட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.  அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கடலூரில் நேற்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இந்த 107 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள்.  கோயம்பேட்டில் இருந்து வந்த மேலும் 430 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.

இதேபோன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பியவர்களில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது.  இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்தது.

இந்நிலையில், கடலூரில் இன்று 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதனால் கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பியவர்களில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 197 ஆகவும், கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 228 ஆகவும் உயர்ந்து உள்ளது.

பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் இரண்டு மூதாட்டிகளுக்கு கொரோனா
தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமாக உள்ள கிருஷ்ணகிரியில் இரண்டு மூதாட்டிகளுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

ஆந்திராவின் புட்டபர்த்தி சென்று திரும்பிய கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒருவரும், சேலம் மாவட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரு பாதிப்பு கூட இல்லாமல் பச்சை மண்டலத்தில் இருந்தது.

இந்த நிலையில், இங்கும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சூளகிரி அருகே உள்ள காமராஜர் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 52 வயது மூதாட்டி ஒருவருக்கும், 60 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இவர்களது இல்ல நிகழ்ச்சியில் கலந்து சென்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இரு மூதாட்டிகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சூளகிரியில் காமராஜர் நகர், அண்ணா நகர் பகுதியை சுற்றி 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தனிமை படுத்தப்பட்டு உள்ளது. மேலும், சுகாதார துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கிருமி நானிசினி தெளிப்பது, மக்களை பரிசோதனை செய்வது என பல்வேறு நோய் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் அந்த பெண்களின் தொலைபேசி சிக்னலை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad