சென்னையின் நிலை என்ன? ஒரே நாளில் 22: அச்சமூட்டும் கோயம்பேடு கொரோனா நிலவரம்; ராயபுரம் மக்கள் திடீர் போராட்டம்
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கொரோனா பரவல் - சென்னையின் நிலை என்ன?
சென்னையில் ஆண்கள் 63.94% பேரும், பெண்கள் 36.06% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 161 தொற்றுகளில் 138 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதித்துள்ள 906 நபர்களில், 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று அதிகபட்சமாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 41 நபரும், கோடம்பாக்கத்தில் 34 நபரும், தேனாம்பேட்டையில் 20 நபரும், அண்ணா நகரில் 13 நபரும், ராயபுரம் மற்றும் வளசரவாக்கத்தில் தலா 10 நபரும் பாதித்து உள்ளனர். இதில் கோயம்பேட்டில் மட்டும் உறுதி செய்யப்பட்ட 22 நபர்களோடு சேர்த்து மொத்தம் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான 6 மண்டலங்களில் ஒன்றான தண்டையார்பேட்டையில் நேற்று ஒரு தொற்று கூட இல்லை. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் இருந்த இரண்டு நபரும் குணம் அடைந்ததால், தொற்றிலிருந்து விடுபட்ட மண்டலமாக இருந்த அங்கு நேற்று மேலும் ஒரு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் ஒரே ஒருவர் மட்டும் குணமடைந்துள்ளனர். மண்டலம் வாரியாக பார்க்கையில், இதுவரை திரு.வி.க நகரில் 210 பேரும், ராயபுரத்தில் 199 பேரும், தேனாம்பேட்டையில் 105 பேரும், கோடம்பாக்கத்தில் 97 பேரும், அண்ணாநகரில் 86 பேரும், தடையார்ப்பேட்டையில் 77 பேரும், பாதித்து உள்ளனர்.
மேலும், வளசரவாக்கத்தில் 40 பேரும், அம்பத்தூரில் 27 பேரும், அடையாறில் 20 பேரும், திருவொற்றியூரில் 16 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 4 பேரும், சோழிங்கநல்லூரில் 3 பேரும், மணலியில் 2 நபரும் உள்ளனர்.
மண்டலம் வாரியாக மொத்தம் உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள்:
திருவொற்றியூர் - 16 - 0 - 4
மணலி - 2 - 0 - 0
மாதவரம் - 4 - 0 - 3
தண்டையார்பேட்டை - 77 - 1 - 21
ராயபுரம் - 199 - 6 - 65
திருவிக நகர் - 210 - 3 - 31
அம்பத்தூர் - 27 - 0 - 0
அண்ணாநகர் - 86 - 4 - 19
தேனாம்பேட்டை - 105 - 0 - 24
கோடம்பாக்கம் - 97 - 0 - 21
வளசரவாக்கம் - 40 - 1 - 6
ஆலந்தூர் - 9 - 0 - 6
அடையார் - 20 - 0 - 7
பெருங்குடி - 9 - 0 - 7
சோழிங்கநல்லூர் - 3 - 0 - 2
சென்னையில் ஆண்கள் 63.94% பேரும், பெண்கள் 36.06% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 205 பேருக்கும், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 196 பேருக்கும், தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் நேற்று ஒரே நாளில் 13 நபருக்கு தொற்று ஏற்பட்டதன் மூலம் மொத்தம் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 80 வயதுக்கு மேல் 12 பேரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 86 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 160 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 118 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 71 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 27 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
வயது வாரியாக பாதித்தோர் எண்ணிக்கை:
0-9 = 29
10-19 = 86
20-29 = 196
30-39 = 205
40-49 = 160
50-59 = 118
60-69 = 71
70-79 = 27
80 = 12
ஒரே நாளில் 22: அச்சமூட்டும் கோயம்பேடு கொரோனா நிலவரம்
கொத்தமல்லி வியாபாரி மூலம் அம்பத்தூர் மண்டலத்தில் ஒரே தெருவில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
கோயம்பேடு சந்தையில் மொத்தம் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் கோயம்பேடு சந்தையில் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் மட்டும் 38 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே விதிமீறி சலூன் கடை நடத்தி வந்த வளசரவாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், சலூன் கடைக்கு வந்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கோயம்பேடு சந்தை வியாபாரி உள்ளிட்ட 8 பேருக்கு நேற்று வரை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு அரியலூர் வியாபாரி, காவலர், கல்லூரி மாணவர் மற்றும் கொத்தமல்லி வியாபாரி மூலம் அம்பத்தூர் மண்டலத்தில் ஒரே தெருவில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
கோயம்பேடு சந்தையில் பழக்கடையில் பணிபுரிந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 850 பழக்கடைகள் மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இயங்கிய பூக்கடை, பழக்கடைகள் இன்று முதல் மாதவாரம் பேருந்து நிலையத்தில் இயங்குகின்றன.
சந்தையில் உள்ள பழ வியாபாரி மூலம் அவருடைய மகன் ஒருவருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 50 வயதான சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்த சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதைதவிர்த்து, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பணிபுரியும் 4 கூலி தொழிலாளிக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் 400-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களால் தொற்று ஏற்பட்டவர்கள் என கடந்த 4 நாட்களில் 38 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் இல்லை: சென்னை ராயபுரம் பகுதி மக்கள் திடீர் போராட்டம்
சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு பரவலை தடுக்கும் வகையில், தெருவுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க தங்களை வெளியே விடுமாறு அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினர்.
தமிழகத்திலேயே சென்னையில், அதுவும் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு 120-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் ராயபுரத்தில் உள்ள குறிப்பிட்ட தெருவில் மட்டுமே 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த தெருவுக்கு சீல் வைத்த போலீஸ், அங்கிருந்து யாரும் வெளியேறாதபடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்கள், தங்களை வெளியே செல்ல அனுமதிக்குமாறு திடீரென ஒன்றுதிரண்டனர்.
பால், ஏடிஎம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தங்களை வெளியே விடுவதில்லை என போலீசாருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற ராயபுரம் காவல் உதவி ஆணையர் தினகரன், இனி தெருவுக்குள்ளே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதி அளித்ததோடு, தற்போது இங்கு கூட்டமாக கூடியதற்கே பல பேருக்கு தொற்று ஏற்படும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். இதனை உணர்ந்து மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.