சென்னை முழுவதும் கொரோனா பரவியது எப்படி? திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 204 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
சென்னை முழுவதும் கொரோனா பரவியது எப்படி?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. எனினும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என சுட்டி காட்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் கணிசமாகவே இருந்து வந்தது.
கோயம்பேடு சந்தையிலிருந்து வியபாரிகள் மூலமாக பரவ தொடங்கிய கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 6535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1824 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

குணமடைந்தவர்கள்
வயது வாரியாக பார்க்கையில்
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 204 பேருக்கு கொரோனா உறுதி
கோயம்பேடு சந்தையிலிருந்து நேரடியாக 852 பேர் தொற்று பெற்றவர்கள் என்றும் அவர்களிடமிருந்து 1015 பேருக்கு தொற்று பரவியுள்ளது என்று தகவல் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மட்டும் கோயம்பேடு சந்தை மூலமாக 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆவடி மாநகராட்சி மற்றும் பொன்னேரி திருமழிசை உள்ளிட்ட பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இருந்து கோயம்பேடு காய்கறி வாங்கச் சென்றவர்களுடன் ஏற்பட்ட தொற்று தொடர்பில் மேலும் 204 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 404 அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்து அதிகம் பாதிக்கபட்ட பகுதியாக திருவள்ளூர் மாறியுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.