தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று; எந்த அடிப்படையில் மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை நிறங்கள்? மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி உண்டா?

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்கள் 2526 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைக்காட்சி வாயிலாக விளக்கமளித்தார். அவர், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2526ஆக அதிகரித்துள்ளது. அதில், சென்னையில் மட்டும் 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று வளர்ந்த நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை அச்சுறுத்தி வருகிறது.  மருந்து ஏதும் கண்டுபிடிக்காமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. உலகநாடுகள் திணறி வரும் நிலையில் இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2  மாதங்களாக மக்கள் வெளியில் வராமல் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேருக்கும், திருவள்ளூரில் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3,200 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறையவில்லை. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 27 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளார். சென்னை சூளையைச் சேர்ந்த மூதாட்டி  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 28-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளார்.

மூதாட்டி மகன் சென்னை  மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அமைச்சு பணியாளர் பணியாற்றி வருகிறார். மூதாட்டியின் குடும்பத்தில் மொத்தம் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட 8 பேரும் ராஜூவ் காந்தி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். மீதமுள்ள 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மூதாட்டியின் உடல் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முழு பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மூதாட்டி உயிரிழந்ததையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

எந்த அடிப்படையில் மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை நிறங்கள் வரையறுக்கப்படுகின்றன?
கடந்த 21 நாள்களாக ஒரு கொரோனா பாதிப்பு கூட கண்டறியப்படாத மாவட்டம் பச்சை மண்டலமாக அறியப்படுகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இரண்டு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைகிறது. அதனையடுத்து, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு இரண்டு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை என்ற மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை பகுதிகள் ?

இதுவரையில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமோ அல்லது கடந்த 21 நாள்களாக ஒரு கொரோனா பாதிப்பு கூட கண்டறியப்படாத மாவட்டம் பச்சை மண்டலமாக அறியப்படுகிறது.

கொரோனா நிற அடிப்படையில் மாவட்டங்கள்

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆவதும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சிவப்பு மண்டலமாக அறியப்படுகிறது.இந்த இரண்டு வரையறைகளின் கீழும் வராத மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலமாக அறியப்படுகிறது.தமிழகத்தின் சிவப்பு நிற மாவட்டங்கள்:

சென்னை
மதுரை
நாமக்கல்
தஞ்சாவூர்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
திருப்பூர்
ராணிப்பேட்டை
விருதுநகர்
திருவாரூர்
வேலூர்
காஞ்சிபுரம்

தமிழகத்தின் பச்சை நிற மாவட்டம்:

கிருஷ்ணகிரி

மீதமுள்ள மாவட்டங்கள் அனைத்தும் ஆரஞ்ச் நிற மாவட்டங்கள் ஆகும்.

ஊரடங்கில் தளர்வு: மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி உண்டா?
பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கவும், அனைத்து வகையான கடைகளும் செயல்படுவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பச்சை மண்டலங்களில் மதுபானக் கடைகள், பான் மசலா கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பைப் பொறுத்து சிகப்பு, ஆரஞ்ச், பச்சை என்ற மூன்று மண்டலங்களாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பச்சை மண்டலத்தில் பெரும்பாலான செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கவும், அனைத்து வகையான கடைகளும் செயல்படுவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பச்சை மண்டலங்களில் மதுபானக் கடைகள், பான் மசாலா கடைகள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடைகளில் ஆறு அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும், ஒரே நேரத்தில் கடைகளில் 5 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை மண்டலமாக உள்ளது. மதுக்கடைகள் திறப்பது குறித்து தமிழக அரசுதான் இறுதி முடிவு எடுக்கும் என தெரிகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad