ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம்: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம்: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்தார். இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அதன்படி பொருளாதாரம், மனிதவளம், கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தேவை ஆகிய இந்த ஐந்து அம்சங்களின்படியே திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன என்று கூறிய அவர், ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் மற்ற பிற திட்டங்கள் குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அறிவித்து வருகிறார்.
* சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது வட்டி தள்ளுபடி சலுகையால் 3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்.
* புதிதாக 25 லட்சம் விவசாயிகளுக்கு சிசான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது; சிசான் கடன் அட்டைகள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
* விவசாயிகள், கிராமப் பொருளாதாரத்துக்கு தேவையான பணப்புழக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
* ஊரக கிராமபுற வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.29,500 கோடி கடனுதவி
* கடந்த 2 மாதங்களில் விவசாயத்துக்கு ரூ.86,600 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு ரூ.11,002 கோடியை தனது பங்காக விடுத்துள்ளது.
* கடந்த மார்ச் 15 முதல் நகர்ப்புற ஏழைகளுக்காக 7,200 புதிய சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
* மாநில அரசு நிறுவனங்கள் விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்ய ரூ.6,700 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* நகர்புறத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளோருக்கு 3 வேலையும் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறது.
* 12,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள், 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன.
* மே 13-ம் தேதி வரை 14.62 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 40 முதல் 50% பேருக்கு கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஊரக வேலை திட்ட தொழிலாளர்களின் தினக்கூலி 182-ல் இருந்து ரூ.202-ஆக உயர்வு
* மழை காலங்களிலும் தேசிய ஊரக வேலைத் திட்டப்பணிகளை தொடர மத்திய அரசு முடிவு
* அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் பணி நியமன கடிதம் அளிக்க வேண்டும்; இதன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் முறைப்படுத்தப்படுவர்.
* அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்
* 10-க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்டு செயல்படும் அபாயகரமான ஆலைகளில் ESI-ஐ திட்டம் கட்டாயம்
* 10-க்கும் குறைவான தொழிலாளர்களுடன் செயல்படும் நிறுவனங்கள் விருப்பப்பட்டால் ESI-ஐ அமல்படுத்தலாம்
* ஒரே தேசம் ஒரே ஊதியம் என்ற திட்டமும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
* புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 5 கிலோ தானியம், ஒரு கிலோ பருப்பு, அடுத்த 2 மாதங்களுக்கு வழங்கப்படும்; இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
* தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது
* 5 ஆண்டுகளுக்குப் பதில் ஓராண்டு பணியாற்றினாலே ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படும்.
* ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்தப்படும்
* ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படும்.
* புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை
* சொந்த ஊர் செல்லும் புலம்பெயர் தொழிலாளருக்காக 14.62 வேலை நாட்கள் உருவாக்கம்
* பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களை கணக்கெடுக்க நடவடிக்கை
* அனைத்து தொழிலாளருக்கும் பொருந்தும் வகையில் குறைந்தபட்ச கூலிச் சட்டம் திருத்தப்படும்
* முத்ரா-சிசு திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால் 2% வட்டி மானியம்
* நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் வழங்க ரூ.5,000 கோடி ஒதுக்கீடு; அதிகபட்சம் ரூ.10,000 வரை கடன் பெற நடவடிக்கை
* நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் இந்த மாதத்திற்குள் உருவாக்கப்படும்
* நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்கள் மற்றும் வீட்டு வசதி துறை நலனுக்கு ரூ,70,000 கோடி ஒதுக்கீடு
* தொழில் நிறுவனங்களே தங்கள் ஊழியர்களை குடியமர்த்த குடியிருப்புகளை உருவாக்கலாம் அதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்
* தனியார் கட்டிடங்களையும் இதன் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்; இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்
* பெரிய நகரங்களில் பயன்படாத அரசு கட்டிங்கள், வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும்
*சிறுவணிகர்களுக்கு முத்ரா திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக தலா ரூ.50,000 கடன் வழங்கப்படும்
* சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக இம்மாத இறுதிக்குள் சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும்
* கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.10000 கோடி நிதி வழங்கியுள்ளது
* நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது
* வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் வேலைவாய்ப்பு உருவாக்க ரூ.6,000 கோடி நிதி; இதன் மூலம் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வேலைவாய்ப்பு பெற்று பொருளாதார ரீதியாக பயனடைவர்.
* பயிர் கடன் வழங்கும் ஊரக கூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.30,000 கோடி கூடுதல் அவசரகால நிதி
* மீனவர்கள், கால்நடை வளர்ப்போரும் கிஷான் கடன் அட்டையை பெறலாம்; கிசான் கடன் அட்டை திட்டத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு
* தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டம் (ESI) நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது என கூறியுள்ளார்.