ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது- நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது- நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்  வகையில் ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்தார். இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் யாருக்கு சென்றடையும் என்பது குறித்து விளக்குவதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் நேற்று உரையாற்றினார். இந்தியாவின் வளர்ச்சி ஐந்து முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக ரூ. 20 லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்கள் வெளியிடப்படும் என்றார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் ஊக்கம் பெரும் எனவும் கூறினார். என்னென்ன அறிவிப்புகள் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பார் எனத் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48 லட்சம் டன் உணவு விநியோகம் செய்யப்பட்டது. ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உணவு தானியத்தின் மதிப்பு ரூ.18,000 கோடி ஆகும். இன்று தொடங்கி வரும் நாட்களில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் படிப்படியாக அறிவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாட்டின் ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு உதவி வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். அவர் கூறியதாவது;

* விரிவான தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

* சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பொருளாதார திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

* ஆத்ம நிர்ப பாரத் திட்டத்தின் 5 தூண்கள் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, புள்ளிவிவரங்கள் மற்றும் தேவை ஆகும்.


* சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதே மத்திய அரசின் நோக்கம்.

* பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கும் 5 தூண்களை வலுப்படுத்துவதே திட்டத்தின் இத்திட்டத்தின் நோக்கம்.

* ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதி நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.

* தொழில் நடத்துவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது திட்டத்தின் நோக்கம்.

* பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

* லாக்டவுன் காலத்தில் உஜ்வாலா போன்ற பல திட்டங்கள் ஏழைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

* நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள்; மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது.

*  ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்.

* இந்தியாவில் தொழில்களை நடத்துவதற்கான நடைமுறைகள் இன்னும் எளிதாக்கப்படும்.

* உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் பயன்படும். மக்கள் சொல்வதை கேட்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும்.

* மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவை எட்டியுள்ளது. இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவும்.

* மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால், இந்தியா மின்மிகை நாடாக உருவெடுத்துள்ளது.

* லாக்டவுனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

*  தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு,  இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன.

* பிரதான் மந்திரி கிசான் திட்டம்,  நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

* ஏழைகளுக்கு இதுவரை ரூ 18 ஆயிரம் கோடி மதிப்பிலான 48 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது

* தொழிற்துறை வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, தொழிலாளர் வளம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தபடுகிறது; நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

* பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் பாதிக்கப்பட்டிருப்பதை அரசு உணர்ந்துள்ளது.

* எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது.

* உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது.

* ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.52000 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ரூ3 லட்சம் கோடி ஒதுக்கீடு. சிறு, குறு தொழில்துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

* உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேச விற்பனை பொருட்களாக மாற்றுவதே அரசின் நோக்கம்.

* சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்; மத்திய அரசின் நடவடிக்கையால் 46 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். 4 ஆண்டு காலங்களில் திருப்பிச் செலுத்தும் கடன்கள் வழங்கப்படும். 12 மாதங்கள் கழித்துதான் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலமும் தொடங்கும்.

* 6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் மூலம் 71 ஆயிரம் டன் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்.

* வருமான வரி செலுத்துவோருக்கு ரூ18,000 கோடி நிலுவை தொகை திருப்பி தரப்பட்டுள்ளது. வருமானவரி செலுத்துவோர் 14 லட்சம் பேர் ரீ பண்ட் நிலுவை தொகைகளை பெற்றுள்ளனர்.

* நலிவடைந்த தொழிற்சாலைகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அடமானம் இல்லாமல் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கபடுகிறது.

* அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம்.

* 52,606 கோடி ரூபாய் மதிப்பில் 41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

 * வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும்.

* வராக்கடன் பட்டியலில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.50,000 கோடி ஒதுக்கீடு. உதவி தேவைப்படும் சிறு, குறு நிறுவனங்கள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

*  ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

* ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது.

* உற்பத்தி, சேவை துறையில் உள்ள நிறுவனங்கள் இடையேயான பாகுபாடு களையப்படும்..

* புதிய கடன் வசதியைப் பெற சொத்துப்பத்திரங்கள் போன்ற பிணை எதையும் தரத் தேவையில்லை.

* RERA-வின் கீழ் பதிவு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்,  கட்டுமானத்தை முடிக்க வேண்டியதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவில் ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது.

* ரூ.1 கோடி முதலீட்டில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், குறு நிறுவனங்களாக கருதப்படும்.

* நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு உயர்வு. நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்வு.

* சிறு குறு தொழில் நிறுவனங்கள் என்பதற்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்.

* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து தொகைகளும் 45 நாட்களில் வழங்கப்படும்.

* தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்காக மத்திய அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கு பி.எப் தொகையை மத்திய அரசு செலுத்தும்.

* சிறு,குறு தொழில்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் சந்தைகள் உருவாக்கப்படும்.

* ஊதியத்தில் பி.எஃப்  நிதிக்கு செலுத்த வேண்டிய 12% தொகை 10% ஆக குறைப்பு.

*  வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி கடனுதவி.

* மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

* ஒப்பந்ததாரர் வங்கி உத்தரவாதம் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

* ஊரடங்கால் பாதித்த பணிகளை முடிக்க மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்ட நிறுவன ஒப்பந்ததாரர்களுக்கு 6 மாத அவகாசம் நீட்டிப்பு .

* டிடிஎஸ் வரிப்பிடித்தம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 25 சதவீதம் குறைப்பு.

* சாலை ரயில்வே உள்ளிட்ட ஒப்பந்த பணிகளை முடிப்பதற்கான காலவரம்பு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு.

* வருமான வரித் தாக்கல் கெடு ஜூலை 31-ம் தேதியிலிருந்து நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad