கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன? சென்னையில் இன்று மட்டும் 2 பேர் பலி: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49-ஆக உயர்வு
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன?
மாநகராட்சியின் பல்வேறு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பிறகும் இராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. ராயபுரத்தில் நேற்று ஒரே நாளில் 81 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிக பாதிக்கப்பட்ட மண்டலமாக ராயபுரம் மாறி உள்ளது.
தமிழகத்தில் மே 9ம் தேதி உறுதி செய்யப்பட்ட 526 தொற்றுகளில், சென்னையில் 279 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 3,330 பேரில், 501 பேர் குணமடைந்துள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 62.79 சதவீதம் ஆண்கள், 37.18 சதவீதம் பெண்களும், திருநங்கை இருவரும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நேற்று அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 81 பேருக்கும், திரு.வி.க.நகரில் 42 பேரும், தண்டையார்பேட்டையில் 24 பேரும், அடையாறு, திருவொற்றுயூரில் தலா 19 பேரும், வளசரவாக்கத்தில் 18 பேரும், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் தலா 17 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாநகர் 15 பேரும், மாதவரத்தில் 11 பேரும், மணலியில் 8 பேரும், ஆலந்தூரில் 6 பேரும், அம்பத்தூர், பெருங்குடியில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சோழிங்கநல்லூரில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. டெல்லியில் இருந்து திரும்பியவர்கள், ஊடகவியாளர்களுக்கு தொற்று என முதலில் ராயபுரத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், மாநகராட்சி நோய் தடுப்பு பணிகளால் கடந்த வாரத்தில் ராயபுரத்தில் தொற்றின் எண்ணிக்கை குறைந்திருந்தது.
இதனால், அப்பகுதிமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் ராயபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இராயபுரத்தில் இதுவரை 121 பேர் குணமடைந்துள்ளனர். எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல், திரு.வி.க. நகர் மண்டலத்திலும், கடந்த வாரத்தை விட, இந்தவாரம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பரவலால் கோடம்பாக்கத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தொற்று எண்ணிக்கை, கடந்த ஒரு வாரத்திற்கு பின் குறைந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.
மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

குணமடைந்தவர்கள்
வயது வாரியாக பார்க்கையில்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்:
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 101 பகுதிகளும், திரு.வி.க.நகரில் 94 பகுதிகளும், தேனாம்பேட்டையில் 62 பகுதிகளும், வளசரவாக்கத்தில் 51 பகுதிகளும், தண்டையார்பேட்டையில் 46 பகுதிகளும், அம்பத்தூரில் 33 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
திருவொற்றியூரில் 27 பகுதிகளும், மாதவரத்தில் 18 பகுதிகளும், அண்ணா நகரில் 13 பகுதிகளும், அடையாறில் 13 பகுதிகளும், பெருங்குடியில் 12 பகுதிகளும், மணலியில் 9 பகுதிகளும், ஆலந்தூரில் 6 பகுதிகளும், சோழிங்கநல்லூரில் 6 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
சென்னையில் இன்று மட்டும் 2 பேர் பலி: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49-ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று வளர்ந்த நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை அச்சுறுத்தி வருகிறது. மருந்து ஏதும் கண்டுபிடிக்காமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. உலகநாடுகள் திணறி வரும் நிலையில் இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2 வாரங்களாக 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னை ராஜூவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டியும், பெரவள்ளூரை சேர்ந்த 67 வயது முதியவரும் இன்று ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, தமிழகத்தில் 7204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.