நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு; தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்குங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.  இவற்றில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.  இதன்படி, ஜூலை 1ந்தேதி முதல் 15ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.  தேர்வுகள் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிப்பதற்காக சில விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள், தேர்வு அறைக்கு வரும்பொழுது, தங்களுடன் சானிடைசர்கள் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்.  தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்குங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 55-நாட்கள் ஆகியுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுக்குள் வராததால், ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நேற்று மத்திய அரசு உத்தரவிட்டது.  கொரோனா பரவல் குறைவான இடத்தில் சில தளர்வுகளை விதித்து, வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது என்றும் தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகம் அறிவுறுத்தி உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url